ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

கணவருடனும் கைக்குழந்தையுடனும் சினிமாவுக்கு வந்தேன்

கணவருடனும் கைக்குழந்தையுடனும் சினிமாவுக்கு வந்தேன்

சௌகார் ஜhனகி

ஜீணவருக்கும் சரியான வேலை எதுவும் அமையாததால் பிறந்த வீட்டுக்குப் பாரமாக இருக்க விரும்பாமல் நானும் கணவரும் சென்னை வந்து செட்டில் ஆக முடிவு செய்தோம். மூட்டை முடிச்சுகளுடன் ரயிலில் பயணம் செய்த போது எனது வெள்ளிப்பாத்திரங்கள் இருந்த பெட்டியை யாரோ களவாடிச் சென்று விட்டார்கள்.

சென்னை சிந்தாதிரிப்பேட்டை அருணாசல் முதலி தெருவில் என் அம்மாவின் தம்பியும் அவர் மனைவியும் வசித்து வந்தார்கள். நேராக அவர்கள் வீட்டுக்குத்தான் சென்றோம். தாய் மாமன் என்ற முறையில் அவர் எனக்கு ஆதரவு தந்தார். எனது முதல் குழந்தை யக்ஞபிரபா இந்த வீட்டில்தான் பிறந்தாள். எனக்கு குழந்தை பிறந்த அன்றுதான் அஸ்ஸாமிலிருந்து என் தந்தை ஒரு தந்தி அனுப்பியிருந்தார்.

அதாவது பிறைவேட்டாக எழுதியிருந்த மெட்ரிகுலேஷன் தேர்வில் நான் பாஸாகி விட்டேன் என்று சொன்னது. அந்தத் தந்தி மொட்ரிகுலேஷன் தேர்லில் பாஸாகிவிட்டாலும் வாழ்க்கையில் பெயிலாகிவிடுவேனோ, என்ற பயம் எனக்கு ஏற்பட்டது. என் கணவர் வேலைக்காக முயற்சிகள் செய்ய சரியான வேலை எதுவும் கிடைக்கவில்லை.

எவ்வளவு நாள்தான் தாய் மாமன் வீட்டிலேயே இருக்க முடியும்? எனவே என்னைத் தேடி வந்த சினிமா வாய்ப்பை இப்போது நான் தேடிப் போனால் என்ன என்று தோன்றியது. திருமணத்துக்கு முன்பே எனக்கு வந்த சினிமா வாய்ப்பு குறித்து என் கணவரிடம் சொல்லி ‘இப்போது நான் சினிமாவில் நடிக்கட்டுமா?’ என்று கேட்டேன். அவரும் சரி என்று சொல்லிவிட்டார். உடனே ஒரு டாக்ஸியைப் பிடித்து கணவரையும் அழைத்துக் கொண்டு கைக்குழந்தையுடன் விஜயராகவாச்சாரி சாலையில் உள்ள பி. என். ரெட்டி வீட்டுக்குச் சென்றேன்.

கணவனுடனும் கைக்குழந்தையுடனும் சென்று சினிமா வாய்ப்புக் கேட்ட ஒரே பெண் அநேகமாக நானாகத்தான் இருப்பேன். எங்களை உட்கார வைத்து மரியாதையுடன் பேசிய பி. என். ரெட்டி ‘இப்போது நான் படமே எடுப்பதில்லையே வேண்டுமானால் என் தம்பி நாகிரெட்டியிடம் சொல்கிறேன். என்று எங்கள் முன்னாலேயே தன் தம்பி நாகரெட்டியிடம் பேசினார். எங்கள் முகவரியை வாங்கி வைத்துக் கொண்ட நாகிரெட்டி மேக்கப் டெஸ்ட் நடக்கும் போது அழைப்பதாகச் சொன்னார். சொன்னபடியே கார் அனுப்பி வரவழைத்தார்.

கல்கத்தாவைச் சேர்ந்த புகழ்பெற்ற மேக்கப் மேன் ஹரிபாபு எனக்கு மேக்கப் போட, ஏழு விதமான பாவங்களில் என்னை வசனம் பேச வைத்து மேக்கப் டெஸ்ட் எடுத்தனர். சினிமாவில் ஏதேனும் வேடம் கிடைக்குமா என்று காத்திருந்த எனக்கு ஒரு தகவலும் வராததால் சற்று ஏமாற்றமாகவே இருந்தது. திடீரென ஒரு நாள் இயக்குநர் எல். வி. பிரசாத்தும், நாகிரெட்டியும் காரில் என் வீட்டுக்கு வந்தனர்.

‘என்ன சார் எனக்கு எதுவும் வாய்ப்புக் கிடைக்காதா? குடும்பம் நடத்தவே மிகவும் கஷ்டப்படுகிறேன்’ என்று அவர்களிடம் கேட்டேன். அதற்கு எல். வி. பிரசாத், “ஏதேனும் ஒரு வாய்ப்பா... படத்தின் கதாநாயகியே நீதாம்மா...” என்றாரே பார்க்கலாம். நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. படத்தின் கதாநாயகன் யார் தெரியுமா? என்.டி. ராமாராவ்தான் படத்தின் நாயகன் இயக்குநர் எல். வி. பிரசாத் இந்திய அளவில் மிகச் சிறந்த ஒளிப்பதிவாளராகப் புகழ் பெற்ற மார்க்கஸ் பாட்லேதான் படத்துக்கு கேமராமேன் தயாரிப்பு நாகிரெட்டி.

இப்படி எனக்கு முதல் படத்தி§¡யே அத்தனை பிரபல்யங்களுடன் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்ததை எனது அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வெண்டும். இப்படிப்பட்ட வாய்ப்பை எனக்குப் பெற்றுத் தந்த படம்தான் ‘செளகார்’ இன்றுரை என் பெயருக்கு முன்னால் வசந்தமாக வந்து எனது அடையாளமாகவே மாறிவிட்டது.

செளகார் முதல் படத்தில் எனக்குக் கிடைத்த சம்பளம் இரண்டாயிரத்து ஐநூறு ரூபாய். இந்த சமீபத்தில் என் கணவருக்கு பூர்வீக சொத்துக்களை விற்ற வகையில் அவர் பங்குக்கும் கொஞ்சம் பணம் வந்தது. அதை வைத்து மூசா சேட் தெருவில் பதினோராம் எண் கொண்ட வீட்டில் வாடகைக்குக் குடியமர்ந்தோம். நான் நடித்த முதல் படத்தில் ‘ரஷ்’ காட்சிகளை போட்டுப் பார்த்தோம். படம் சம்பந்தப்பட்ட எல்லோருக்கும் திருப்தியாக இருந்தது. அப்போது ரஷ் பார்க்க வந்திருந்த பி. பானுமதியாக ‘யார் இந்தப் புது பொண்ணு’ என்று கேட்டு எனது நடிப்பைப் பாராட்டியதுடன் என் நடிப்பைப் பாராட்டினார்.

1950ஆம் ஆண்டு மார்ச் மாதம் ‘செளகார்’ படம் வெளியானது. பத்திரிகைகள் படத்தைப் பாராட்டியதுடன் என் நடிப்பை புகழ்ந்தும் விமர்சனங்கள் எழுதியிருந்தன. பக்கத்து வீட்டுப் பெண் தோற்றத்தில் நான் இருப்பதாக பத்திரிகைகள் விமர்சனத்தில் குறிப்பிட்டிருந்தன. ‘பாதாள பைரவி’ படத்தை எடுத்த கே. வி. ரெட்டி என்னிடம் ‘சினிமாவுக்கேற்ற சிளாமர் உன்னிடம் இல்லை.

நீயெல்லாம் சினிமாவில் தாக்குப் பிடிக்க முடியாது பேசாமல் ஊரைப் பார்க்கப் போய்விடு’ என்றார் பி. பானுமதி. கண்ணம்மா, டி. ஆர். ராஜ்குமார், மாதுரிதேவி போன்றவர்கள் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது ஆயினும் நடிப்புத் திறமை¨யால் நானும் இந்தத் திரையுலகில் திலைத்து நிற்க முடியும் என்று திடமாக நம்பினேன். அடுத்ததாக மார்டன் தியேட்டஸின் ‘வ¨யாபதி’ படத்தில் நடித்தேன்.

டி. ஆர். சுந்தரம் இயக்கிய இப்படத்திற்கு வசனம் எழுதியவர் பாவேந்தர் பாரதிதாசன். ‘செளகார்’ தெலுங்குப் படத்தில் நான் நடிக்கும் போதே ‘வசனங்களை மட்டும் சரியான உச்சரிப்புடன் பேசினால் நடிப்பு தானாகவே வரும்’ என்று சொல்லுவார் இயக்குநர் எல். வி. பிரசாத். இந்த வாசகங்களை நான் ஒரு பாடமாகவே எடுத்துக் கொண்டேன். ‘வளையாபதி’ படத்தில் பாவேந்தர் பாரதிதாசன் எழுதும் வசனங்களை சரியாக உச்சரித்துப் பேச வேண்டும் என்பதற்காகவே ட்யூஷன் வைத்து தமிழ் படித்தேன். அடுத்ததாக ஜெமினி தயாரிப்பில் நடிக்கும் வாய்ப்புக் கிடைத்தது.

ஜெமினி ஸ்டூடியோவின் காஸ்ட்டிங் பிரிவில் அப்போது பணியாற்றி வந்த ஜெமினி கணேசன் என்னைப் பார்த்து ‘என்னம்மா ஐந்தடி உயரம்தானே இருக்கிறாய்? என்றார். “என்ன சார் பண்றது? ஆண்டவன் எனக்கு கொடுத்தது அவ்வளவுதான்’ என்று நான் பதில் சொன்னேன். அப்போது எனக்கு ஜெமினி கணேசனுடன் ஏற்பட்ட பழக்கம் கடைசிவரை தொடர்ந்தது.

நான் ஆசையுடன் அவரை அண்ணா என்று அழைக்க அவர் என்னை ஜானி என்றுதான் அழைப்பார். ஒரு முறை சாவித்திரி கூட ஜெமினியிடம் “என்ன ஜானி ஜானி என்று ரொம்பத்தான் இழையுaங்க என்று கேட்க அதற்கு அவர் “ஜானி என்றுமே என் உடன் பிறவா தங்கை’ என்று பதில் சொன்னார். தமிழில் வனஜா நடிக்க, ஜெமினி தயாரித்த மூன்று பிள்ளைகள் படத்தின் தெலுங்கப் பதிப்பில் நான் நடித்தேன். “முக்குறு &8!னிlழிV’ என்ற பெயரில் தெலுங்கில் உருவான இந்தப் படத்தில் நடிக்க எனக்குக் கிடைத்த ஊதியம் எழாயிரம் ரூபாய்.

இந்த சமயத்தில் எனக்கு ஒரு ஆண் குழந்தையும் பிறந்து இரண்டு குழந்தைகளுக்கும் தாய்ப்பால் கொடுத்தது, நானும் சரிவரச் சாப்பிடாதது; தொடர்ந்து படப்பிடிப்புகளில் கலந்து கொண்டது என எல்லாமுமாகச் சேர்ந்து படப்பிடிப்பின் போது ஒரு நாள் மயக்கம் போட்டு விழுந்து விட்டேன். உடனடியாக என்னை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சையளித்தார்கள்.

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட ஜெமினி அதிபர் எஸ். எஸ். வாசன் அந்தப் படத்தில் நான் நடிப்பதற்காக பேசப்பட்ட முழுத் தொகையையும் உடனடியாக எனக்குத் தரும்படி உத்தரவிட்டதுடன், முழுமையாக உடல் நலம் தேறிய பிறகு நான் நடிக்க வந்தால் போதும் என்றும் அதன் பிறகுதான் படப்பிடிப்பு என்றும் கூறிவிட்டார். அப்போது

நான் இருந்த நிலையில் என்னை படத்திலிருந்தே கூட நீக்கியிருக்கலாம். ஆனால் அப்படிச் செய்யாதது மட்டுமல்ல, நடிப்பதற்கு முன்பே அதற்குரிய சம்பளத்தைக் கொடுத்ததுடன், உடல் நலத்தை தேற்றிக் கொண்டு வந்த பிறகு படப்பிடிப்பை நடத்தலாம்என்று சொன்ன அவரது பெருந்தன்மையை இப்போதும் நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறேன்.

இதைத் தொடர்ந்து ஏ.வி.எம். தயாரித்த ‘நாகதேவதை’ கன்னடப் படத்தில் நடித்தேன். இப்படி என் நடிப்பு வாழ்க்கையின் ஆரம்ப நிலையிலேயே விஜயா வாஹினி, ஜெமினி, ஏ.வி. எம். என்று முன்னணி தயாரிப்பு நிறுவனங்களின் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை எனது பாக்கியம் என்றுதான் கூற வேண்டும். தொடர்ந்து பீம்சிங்கனி ‘பா’ வரிசைப் படங்கள் பலவற்றிலும் நடித்தேன். எம்.ஜி.ஆருடன் ‘ஒளி விளக்கு’ படத்தில் நடித்த சமயத்திலேயே சிவாஜியுடன் ‘உயர்ந்த மனிதன்’ படத்தில் நடித்தேன்.

தமிழில் எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன் என்று முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்திருப்பதைப் போலவே தெலுங்கிலும் என். டி. ராமராவ், ஏ. நாகேஸ்வரராவ் போன்றவர்களுடனும் நடித்திருக்கிறேன். இதேபோல் பீம்சிங், கிருஷ்ணன் பஞ்சு, கே. பாலசந்திரர், தாதாமிராசி என்று அத்தனை முன்னணி இயக்குநர்களின் படங்களிலும் நடித்திருக்கிறேன். அறுபதுகளிலும் எழுபதுகளிலும் ஏராளமான படங்களில் நடித்துக் கொண்டிருந்த போதே நாடகங்களிலும் நடித்திருக்கிறேன்.

டெலிபோன் டிபார்ட்மெண்டில் அப்போது பணியாற்றிக் கொண்டிருந்த ‘மேஜர்’ சுந்தரராஜன், ஒரு நாள் சைக்கிளில் என் வீட்டுக்கு வந்து, கே. பாலசந்திரரின் ராகினி ரிக்ரியேஷன்ஸ் ‘மெழுகுவர்த்தி’ நாடகத்தில் நான் நடிக்க வேண்டும் என்று கேட்டார். நாடகத்தில் நடிப்பதன் மூலம் ரசிகர்களுடன் நேரடித் தொடர்பு கிடைக்குமே என்பதால் நான் நடிக்க சம்மதித்தேன். நாடகத்தில் நான் நடிக்க சம்மதித்ததை முதலில் பாலசந்தர் நம்ப மறுத்தாராம். காரணம் அப்போது நான் சினிமாவில் அவ்வளவு பிஸியாக நடித்துக் கொண்டிருந்தேன்.

எம்.ஜி.ஆர். தலைமையில்தான் நான் நடித்த ‘மெகுழுவர்த்திகள்’ நாடகம் அரங்கேறியது. நாடகம் அவருக்குப் பிடித்துப் போக அவர் அதை சினிமாவாக தயாரித்து நடிக்கவும் திட்டமிட்டார். பின்னர்என்ன காரணத்தாலோ அது நடக்காமல் போனது. ஆயினும் இந்த நாடகத்தைத் தொடர்ந்து நான் நீர்க்குமிழி, எதிர்நீச்சல் ஆகிய நாடங்களில் நடித்தேன். சுமார் முன்னூறு முறை இந்த நாடகங்களுக்காக மேடையேறியிருக்கிறேன்.

மொத்தம் முன்னூற்று எண்பத்தைந்து படங்களில் நடித்திருக்கிறேன். இவற்றில் கன்னடம் சுமார் முப்பத்தைந்து படங்கள் இருக்கும். இந்தியில் மூன்று படங்களிலும் மலையாளத்தில் ஒரு படத்திலும நடித்திருக்கிறேன்.

மீதி அனைத்தும் தமிழ் மற்றும் தெலுங்குப் படங்கள்தான். ‘காவியத் தலைவி’, ‘ரங்க ராட்டினம்’ ஆகிய இரண்டு படங்களையும் சொந்தமாகத் தயாரித்து நடித்தேன். எனக்கு இரண்டு மகள். ஒரு மகன். மூத்த மகள் யக்ஞபிரபாவின் மகள் வைஷ்ணவிதான் பல படங்களில் நடித்தார். மகன் இப்போது அமெரிக்காவில் இருக்கிறார். எனக்கு வாழ்வளித்து ஆதரவுக்கரம் நீட்டியது தமிழ் நாடு ரசிகர்கள்தான். இதை என்றென்றும் நான் மறக்க மாட்டேன் என்கிறார் செளகார் ஜானகி.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி