ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் பிறை 16
விஜய வருடம் ஐப்பசி மாதம் 05ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 22, 2013
வரு. 81 இல. 251
 

பரபரப்பில் நடந்த தவறு

பரபரப்பில் நடந்த தவறு

உழவன் ஒருவன் நாய் ஒன்றை வளர்த்து வந்தான். அந்த நாய் அவனிடம் நன்றியுடன் நடந்து கொண்டது. அவன் எந்த வேலைகள் இட்டாலும் பொறுப்பாகச் செய்தது. அதனிடம் அன்பு காட்டிய அவனும் அதற்கு வேளை தவறாமல் உணவு அளித்து வந்தான்.

அவனுக்குக் குழந்தை பிறந்தது. சில மாதங்கள் சென்றன.

கணவனும் மனைவியும் ஏதோ வேலையாக வெளியே செல்ல வேண்டி வந்தது.

தன் நாயிடம் அவன் “குழந்தை தொட்டிலில் தூங்குகிறது. கவனமாகப் பார்த்துக் கொள்” என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டான். வீடு திரும்பிய அவன் தொட்டில் கவிழ்ந்து கிடப்பதையும் நாயின் வாயெல்லாம் இரத்தம் படிந்திருப்பதையும் கண்டு அதிர்ச்சி அடைந்தான். ‘தன் குழந்தையை நாய் கொன்று விட்டது’ என்று கோபம் கொண்ட அவன் அருகில் கிடந்த கோடரியை எடுத்தான். நாயின் மண்டையில் ஓங்கி அடித்தான். மண்டை உடைந்த நாய் அங்கேயே இறந்தது.

கவிழ்ந்து கிடந்த தொட்டிலைத் தூக்கிப் பார்தான் அவன். குழந்தை உயிருடன் இருப்பதையும் அதன் அருகே பாம்பு ஒன்று கடிபட்டு இறந்து கிடப்பதையும் கண்டான்.

உண்மை அவனுக்குப் புரிந்தது. “ஐயோ! என் குழந்தையைக் கொல் வந்த பாமபைக் கொன்ற நாயைக் கொன்று விட்டேனே. பரபரப்பில் தவறு செய்து விட்டேனே” என்று அழுது புலம்பினான் அவன்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி