ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,08, 2013

Print

 
பாணமவில் பூமியதிர்ச்சி 4.5 ரிச்டர் 400 கி.மீ. கடல் தூரத்தில் பதிவு

பாணமவில் பூமியதிர்ச்சி 4.5 ரிச்டர் 400 கி.மீ. கடல் தூரத்தில் பதிவு

அம்பாறை மாவட்டம் பாணமவில் 4.5 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் உணர ப்பட்டுள்ள தாக புவியியல்ஆய்வு மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்து ள்ளது.

கடலுக்கடியில் 400 கிலோ மீற்றர் தூரத்திலேயே இந்த நில நடுக்கம் உணரப்பட்டுள்ளதாகவும் அந்த பணியகம் அறிவித்துள்ளது. நேற்று பிற்பகல் வேளையிலேயே இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இதேவேளை, இலங்கையில் நிலநடுக்க அபாயம் இருப்பதாக புவியியல் வல்லுநர் திசாநாயக்க கடந்த ஞாயிற்றுக்கிழமை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கையில் கடலுக்கு அடியில் மிகப் பெரிய வெடிப்பு ஏற்பட்டிருப்பதால் நிலநடுக்க அபாயம் இருப்பதாகவே புவியியல் வல்லுநர் திசாநாயக்க எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இலங்கை புவியியல் பேராசிரியர் சி. பி. திசாநாயக்க இலங்கையின் கடல் பகுதி மற்றும் நில நடுக்கங்கள் பற்றி ஆராய்ச்சி நடத்தி வருகிறார். இலங்கைக்குரிய பூமி பகுதியில் சுமார் 500 முதல் 600 கிலோ மீற்றர் தூரத்தில் தெற்கு கடலில் பூமிக்கு அடியில் பாரிய வெடிப்பு ஏற்பட்டு வருவதாக அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இலங்கையின் தெற்கு மற்றும் தென் மேற்கு திசையில் புதிய புவி அடுக்கு உருவாகி வருவதால் இந்த வெடிப்பு ஏற்பட்டு வருகிறது. என்றும் அவர் எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]