ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,08, 2013

Print

 
கைதான மங்களவின் ஆதரவாளர்கள் 24 பேருக்கும் 14 வரை விளக்கமறியல்

ஐ. தே. க. மாத்தறை மோதல் சம்பவம்

கைதான மங்களவின் ஆதரவாளர்கள் 24 பேருக்கும் 14 வரை விளக்கமறியல்

அடையாள அணிவகுப்பு நடத்தவும் நீதிமன்று உத்தரவு

மாத்தறையில் நடந்த மோதல் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மங்கள சமரவீரவின் ஆதரவாளர்கள் 24 பேர் உட்பட 25 பேரையும் 14ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. மாத்தறை பிரதம மஜிஸ்திரேட் ருவன் சிசிர குமார உத்தர விட்டார். மோதலில் காயம டைந்திருந்தவர்கள் நேற்று நீதிமன்றில் ஆஜர் செய்யப்ப டவில்லை. இது தொடர்பில் அடுத்த வழக்கு தினத்தன்று அடையாள அணிவகுப்பு நடத்துமாறும் மஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

தென் மாகாண சபை உறுப்பினர் கயான் சன்ஜீவ உடன் சட்டத்தரணி ஊடாக ஆஜரான மாகாண சபை உறுப்பினர் அகுரஸே பிரியந்த, உடன் மாத்தறை முன்னாள் மேயர் உபுல் நிஷாந்த, நகரசபை உறுப்பினர் நkன் அபேகுணவர்தன, பிரதேச சபை உறுப்பினர் லயனல் கொடிகார, நகரசபை வேட்பாளர் சிந்தாலாவனி ஆகியோரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீர, முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எச். ஆர். விமலசிரி ஆகியோரும் சந்தேகநபர்கள் ஆஜர் படுத்தப்பட்ட போது நீதிமன்றத்துக்கு வந்திருந்தனர்.

மாத்தறை மேலதிக மாஜிஸ்திரேட் மஞ்சுள கருணாரத்ன முன்னிலையில் கடந்த மே 06ஆம் திகதி ஆஜர் செய்யப்பட்ட மங்கள சமரவீரவின் 24 ஆதரவாளர்களும் 07ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். (எப். எம்.)


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]