ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

மண்ணில் நிலைத்து வாழ....

மண்ணில் நிலைத்து வாழ....

கால முன்னேற்றம்
கண்டுபிடிப்புத் தொடரானது
சந்தர்ப்பங்கள் சாந்தமாக
அதில் அமிழ்ந்து நீந்தி
பொறுக்கியெடுத்தவர்களால்
பிரவாகம் கண்டது
புதுப்புது நவீனங்கள்

இந்த வாழ்க்கைப் பயணத்தை
சுகமாக்கித் தந்தவர்கள்
இயந்திர சாதனங்களாக
கணிதத் தோற்றங்களாக
விஞ்ஞான மூலகங்களாக
அரசியல் தத்துவங்களாக
சமூக வரைவிலக்கணங்களாக
சாகா வரம் பெற்றார்கள்

உயிரற்ற ஓவியமாக
ஓவியன் வாழ்வைத்தான்
சிற்பமாக சிலையாக
வாழ வைத்தான் சிற்பி
வீதிகள் கிராமங்கள்
மண்டபங்கள் அமைப்புக்கள்
விளையாட்டு அரங்குகளின்
பெயர் நாமங்களானார் பலர்

தேசத் தலைவர்களாய்
சமூகத் தொண்டர்களாய்
இந்த மனிதத்திற்கு
நன்மை சேர்தவரெல்லாம்
சூடிக் கொண்டார்
தன்பெயரை எங்கனும்

சாதனையாளர்களாக
இப்படியும் சிலர் வாழ்ந்திருக்க
விபத்தென்றும் நோயென்றும்
முகவரிகளை தொலைத்து
போனவர்கள் எத்தனை பேர்
தினம் தினம் பாதை நடுவிலும்
ஆற்றுப் படுக்கைகளிலும்
ஆகாய பரப்புகளிலும்
காணாமல் போகின்றனர்.

இது என்ன மனிதம்
இது என்ன காலம்
என்றெல்லாம் மற்றவர்
சொல்லிப் போகின்றனர்.
சமாதான வரிகளை
இழப்புக்களின் சொந்தங்கள்
தேறவேண்டும் என்பதற்காய்
எந்தக் காலத்தில்
இது இருக்கவில்லை

எதுதான் இங்கு
சமாந்தரமாக இருந்தது.
சொற்பகாலம் எம்மை
வாழவைக்கும் உலகு
சிலரை மாத்திரம்
வாழ்ந்திருக்க வைக்கிறது
அவர் செய்த புண்ணியமாய்
உலக முடிவுவரை
என்ன இருந்தாலும்
பெறுமதி அற்றுப்போக
வந்ததல்ல இந்த உயிர்
நாம் வாழந்திருக்கும்

இந்த சமூகமோ
விரல் கொண்டு
எண்ணும் சிலரோ
மனிதனாய் வாழ்ந்தோமென
உச்சரிக்க வேண்டும்.
எம்பெயரை ஒருநாள்

ஆம் இன்று நாம்
எமக்கென்று வாழ்ந்திருப்பதை
அடுத்தவர் நன்மைக்காகவும்
வாழ்வது சாத்தியமானால்
என்றும் வாழும்
இந்த மனிதம் உலகில்
மற்றவர் மனங்களில்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி