ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

கந்தனும் ஆளோடு ஆளாக

கந்தனும் ஆளோடு ஆளாக

தெந்தெட்டாய் வாழப் பழகி விட்டார்கள், தத்தம்
தேகத்திற்குச் சொகுசாய் இருக்கப் பழகி விட்டார்கள்
சிந்தித்துச் சிக்கனமாய் வாழ மறந்து விட்டார்கள்,
சேதாரங்களோடு வாழத் துணிந்து விட்டார்கள்.

முந்தையவர் அவசரமாய் வாழ்ந்த தில்லையே
மூலை முடுக்கெலாம் அவதானிக்க மறந்ததில்லையே
விந்தையாக வீதிதோறும் விபத்தும் இல்லையே
வீட்டுக்கு வீடு வீதிகளென்று அப்போதில்லையே!

கந்தையோடும் கால்நடையோடும் கனநாள் பயணமாக
கந்தனும் ஆளோடு ஆளாக அரோகரா சொல்லியே
விந்தையாக அற்புதங்கள் பலதும் ஆற்றியே வடி
வேல் முருகன் கதிர்காமம் சந்நிதி நல்லூரில் உறைந்தான்.

சந்தமுடன் செல்லப்பா யோகர் சுவாமிகள் சுத்த
சாகித்தியமாய் போற்றி நல்லூரை தரிசித்தார்கள்,
சொந்தமாய் சோபிக்க எத்தனை வைத்திருந்தாலும்,
சுருதி ஞானம் இருந்தால் பேராசை தீருமடா பார்

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி