ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,08, 2013

Print

 
சவூதியில் முதல் பெண் வழக்கறிஞருக்கு அனுமதி

சவூதியில் முதல் பெண் வழக்கறிஞருக்கு அனுமதி

சவூதி அரேபியாவில் வழக்கறிஞராக செயற்பட முதல் முறையாக பெண்களுக்கு அந்நாட்டு நீதி அமைச்சு அனுமதிப்பத்திரம் வழங்கியுள்ளது.

இதன்படி தமக்கு மேற்படி அனுமதிப்பத்திரம் கிடைக்கப் பெற்றிருப்பதாக நான்கு பெண்கள் தெரிவித்ததாக அல் வதான் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. சவூதியில் கடந்த காலங்களில் சட்டத்துறையில் பட்டப்படிப்பு மற்றும் முதுமாணிப் பட்டங்களை முடித்த பல பெண்களும் அதனை செயற்படுத்த முடியாமல் இருந்தனர்.

இந்நிலையில் நீதியமைச்சின் புதிய நடவடிக்கை, அந்நாட்டு நீதிமன்ற செயற்பாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது. குறிப்பாக பெண்கள் விவாகரத்து மற்றும் பராமரிப்பு வழக்குகளில் பெண் வழக்கறிஞர்கள் முக்கிய பங்கு வகிக்க முடியும் என நம்பப்படுகிறது.

சவூதியில் கடந்த ஏப்ரல் மாதத்தில் முதல் பெண் பயிற்சி வழக்கறிஞரை நீதி அமைச்சு பதிவு செய்தது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]