ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,08, 2013

Print

 
அமெ. படை நடவடிக்கை: விளக்கம் கேட்கிறது லிபியா

அமெ. படை நடவடிக்கை: விளக்கம் கேட்கிறது லிபியா

அமெரிக்க அதிரடிப் படையினர் தமது நாட்டுக்குள் இராணுவ நடவடிக்கையில் ஈடுபட்டது குறித்து லிபிய பிரதமர் அமெரிக்காவிடம் விளக்கம் கேட்டுள்ளார்.

லிபிய தலைநகர் திரிபோலியில் கடந்த சனிக்கிழமை அமெரிக்கப் படை மேற்கொண்ட தேடுதல் வேட்டையில் அல் கொய்தா அமைப்பின் முன்னணி தலைவராக கருதப்படும் அனஸ் அல் லிபி என்பவரை அமெரிக்க அதிரடிப்படை கடத்திச் சென்றது. இதுபற்றி அமெரிக்க நிர்வாகத்துடன் தொடர்பு கொண்டு விளக்கம் கோரப்பட்டிருப்பதாக லிபிய பிரதமர் அலி சைதன் அறிவித்துள்ளார்.

அனஸ் அல் லிபி 1998 ஆம் ஆண்டு கிழக்கு ஆபிரிக்காவில் அமெரிக்க தூதரகங்கள் மீது நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களின் பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்தவராவார்.

‘லிபியாவுக்குள் லிபிய பிரஜை மீது சட்ட நடவடிக்கை எடுக்கும் உரிமை லிபிய அரசிடமே இருக்கிறது. அது எந்த குற்றச்சாட்டாக இருந்தாலும் அது நிரூபிக்கப்படும் வரை நிரபராதிதான்’ என்று லிபிய பிரதமரின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]