ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

ஆப்கான் ஜனாதிபதி தேர்தலில் சுமார் 20 வேட்பாளர்கள் போட்டி

ஆப்கான் ஜனாதிபதி தேர்தலில் சுமார் 20 வேட்பாளர்கள் போட்டி

ஆப்கான் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட பலரும் கடைசி நேரத்தில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள நிலையில் முன்னணி வேட்பாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

வேட்பு மனுத்தாக்கல் செய்யும் கடைசி நாளான கடந்த ஞாயிற்றுக்கிழமை முன்னாள் போராளிகள், பழங்குடித் தலைவர்கள், முன்னாள் மற்றும் தற்போதைய அதிகார சக்திகள், நிபுணர்கள் என பலரும் வேட்புமனுத் தாக்கல் செய்தனர். இதன் மூலம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சுமார் 20 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளனர்.

கடந்த 2001ம் ஆண்டு முதல் ஆப்கான் ஜனாதிபதியாக செயற் படும் ஹமீட் கர்சாயி, தொடர்ந்து மூன்றாவது முறை போட்டியிட அனுமதி இல்லாததால் அடுத்த ஆண்டு பதவியிலிருந்து வெளியேறு கிறார்.

இந்நிலையில் ஆப்கான் அரசு தலிபான்களுடன் அமைதி முயற்சியில் ஈடுபட்டு வருவது மற்றும் நேட்டோ கூட்டுப்படை 13 ஆண்டு யுத்தத்தின் பின் அடுத்த ஆண்டு ஆப்கானை விட்டு வெளியேறவுள்ள தீர்க்கமான சூழலி லேயே அங்கு ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப் பிடத்தக்கது. வெளிநாட்டு நேரடி உதவி இன்றி ஆப்கானில் இடம்பெறவுள்ள முதலாவது சுயாதீன தேர்தலாகவும் இது அமையவுள்ளது.

இதில் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் 2009 ஜனாதிபதி தேர்தலில் இரண்டாவது இடத்தை பிடித்தவருமான அப்துல்லாஹ் அப்துல்லாஹ் முன்னணி வேட்பாளர் களில் ஒருவராகக் கருதப்படுகிறார். தவிர ஹமிட் கர்சாயின் மூத்த சகோதரர் கயும் கர்சாய்யும் தேர்தலில் போட்டியிடுகிறார். முன்னர் அல் கொய்தா அமைப்புடன் தொடர்பு பட்டவரும் முன்னாள் போராளியு மான ரசூல் சய்யாப்பும் எதிர்வரும் தேர்தலில் முன்னணி வேட்பாளராக கருதப்படுகிறார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி