ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,08, 2013

Print

 
திக்குவல்லை கிரிக்கெட் போட்டியில் மதுராபுர றோயல் கழகம் வெற்றி

திக்குவல்லை கிரிக்கெட் போட்டியில் மதுராபுர றோயல் கழகம் வெற்றி

திக்குவல்லை பிரதேச சபை மற்றும் வியாபாரசங்கம் ஆகியன இணைந்து நடாத்திய மாபெரும் கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வெலிகம மதுராபுர றோயல் கழகம் வெற்றியீட்டி ஒரு இலட்சம் ரூபா பரிசுத் தொகையையும், டி.ஸி.எல். வெற்றிக் கிண்ணத்தையும் சுவீகரித்துக் கொண்டது. திக்குவல்லை “ஜொலி” போய்ஸ் கழகம் இரண்டாம் இடத்தைப் பெற்றுக் கொண்டது.

திக்குவல்லை பொது விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்ற இப் போட்டியின், இறுதி நாள் பரிசளிப்பு விழாவில், இளைஞர் விவகார மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சர் டளஸ் அழகப் பெரும பிரதம அதிதியாக கலந்து கொண்டு வெற்றிக் கிண்ணத்தை வழங்கி வைத்தார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]