ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

காந்திஜpயின் பதில்!

காந்திஜpயின் பதில்!

காந்திஜி ஒரு முறை ஷிமோகாவுக்குச் சென்றிருந்தார். அவருடன் காகா காலேல்கர் போன்றவர்களும் உடன் சென்றிருந்தனர். காலேல்கர் காந்தியடிகளிடம் “இங்கே ஜெர்ஸப்பா நீர் வீழ்ச்சியை நாம் பார்க்க வேண்டாமா? இவ்வளவு தூரம் வந்துவிட்டு இதைப் பார்க்காமல் போகலாமா” என்றார் “எனக்கு நிறைய வேலைகள் இருக்கின்றன மனம்போன போக்கில் சுற்றிக் கொண்டிருக்க நேரமில்லை.

வேண்டுமானால் நீங்கள் போய் பார்த்துவிட்டு வாருங்கள்” என்றார் காந்திஜி. “உலகச் சிறப்புமிக்க நயாகரா நீர்வீழ்ச்சியை விட மிக உயர்த்திலிருந்து விழுகிறதாம்.

இதை நீங்கள் அவசியம் பார்க்க வேண்டும்” என்று வற்புறுத்தினார் காலேல்கர். “இதிலென்ன அதிசயம்! ஆகாயத்திலிருந்து விழும் மழைத் தண்ணீரை விடவா இது உயரத்திலிருந்து கொட்டுகிறது” என்று பதிலளித்தார் காந்திஜி.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி