ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,08, 2013

Print

 
டென்னிஸ் என்ற பெயர் எப்படி வந்தது?

டென்னிஸ் என்ற பெயர் எப்படி வந்தது?

11ம் நூற்றாண்டில் பிரெஞ்சுத் துறவிகள் மடாலயத்தில் ஒழுங்கற்ற கைப்பந்தை மட்டையால் அடித்து விளையாடத் தொடங்கினார். ஒரு முற்றத்தில் கயிறு கட்டி கைப்பந்தை அடித்து விளையாடினர். இந்த விளையாட்டு முன்னேற்றமடைந்து அரச குலத்தாரிடையே பிரபலமடைந்து 13ம் நூற்றாண்டில் இங்கிலாந்திற்குச் சென்றது.

வலைக்கு மேலாக பந்தை அடிக்கும்போது பிரெஞ்சு விளையாட்டு வீரர்கள் டெனேஸ் TENEZ என்று கத்துவார்கள். அதன் பொருள் ‘இதோ வருகிறது’, அல்லது ‘அதை ஏற்றுக்கொள்’ என்பதாகும். இதன் அடிப்படையில் டென்னிஸ் என்று இந்த ஆட்டம் பின்னாளில் புகழ்பெற்றது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]