ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

கவியரசர் கண்ணதாசனின் கடைசிப் பாடல்

கவியரசர் கண்ணதாசனின் கடைசிப் பாடல்

இதுவரை நாம் எல்லோரும் கவியரசர் கண்ணதாசனின் கடைசிப் பாடல் மூன்றாம் பிறை படத்தில் வந்த ‘கண்ணே கலைமானே’ என்ற பாடல் தான் என்றே நினைத்து வந்தோம். திரை உலகினர் கூட அந்தப் பாடலையே பிரதானமாக கூறி வருகின்றனர்.

ஆனால் கவிய ரசர் கண்ணதாசனால் எழுதப்பட்டு வெளியான கடைசிப் பாடல் மதர் லேன்ட் பிக்சர்ஸ் கோவைத் தம்பியின் தயாரிப்பில் வெளியான ‘உன்னை நான் சந்தித்தேன்’ என்ற படத்தில் வரும் ‘தேவன் தந்த வீணை’ என்ற பாடல் தான் என்பது யாருக்கும் தெரியவில்லை! அதில் கடைசி கடைசி யாக அவர் எழுதியிருக்கும் வரிகளைப் பாருங்கள்.

வானம் எந்தன் மாளிகை

வையம் எந்தன் மேடையே

வண்ணங்கள் நான் எண்ணும் எண்ணங்கள்

எங்கிருந்தேன் இங்கு வந்தேன்

இசையினிலே எனை மறந்தேன்

இறைவன் சபையில் கலை கவி)ஞன் நான்...!

எப்படிப்பட்ட வைர வரிகள்? இதுதான் கடைசிப் பாடலாக இருக்க வேண்டும் என நினைத்தே எழுதி இருப்பாரோ?

உன்னை நான் சந்தித்தேன் வெளியானது 17.10.1984

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி