ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOMBER , 08, 2013
வரு. 81 இல. 238
 

உலக சினிமாவின் உயிர்நாடி

உலக சினிமாவின் உயிர்நாடி

துடிக்கும் இதயமும் இவர் பெயர் கேட்டால் நடிக்கும் கெமரா முன் முகம் சிவந்தால், எரிமலை கூட வெடிக்கும். அதனால் தான், ஏற்ற பாத்திரங்களுக்கே அவரை பிடிக்கும். சின்னையாபிள்ளை கணேசனாக பிறந்து, உலக சினிமாவின் உயிர் நாடியாய் உலா வந்த அந்த மூன்றெழுத்து, மூச்சுக் காற்றிருக்கும் வரை மறையாது. பராசக்தியில் தொடங்கி, படையப்பா வரை, இவரை மிஞ்ச எவரப்பா? அவர்தான்.

தமிழ் சினிமாவின் நடிகர் திலகம் என்று போற்றப்படும் சிவாஜி கணேசனப்பா என்று சொல்ல வைத்தவர் உடல், பொருள், ஆவி அத்தனையும், தமிழ் சினிமாவிற்கு அர்ப்பணித்தவர். இன்று அவர் நம்மோடு இல்லாவிட்டாலும் அவர் நடித்து சென்ற காலத்தால் அழியாத படங்கள் எத்தனையோ இன்று தமிழ் சினிமாவை பறைச்சாற்றுகின்றது. இன்றைய நடிகர்களுக்கு அவரது நடிப்பு தான் ஒரு ஆரம்ப கல்வி பாடம் போன்றது. அவரைப் பார்த்து நடிப்பையும் வரலாற்றையும் அறிந்து கொண்டவர்கள் பலர்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி