ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,08, 2013

Print

 
55 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழில் வஹிதா ரஹ்மான், கமலுக்கு அம்மாவாக நடிக்கிறார்

55 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் தமிழில் வஹிதா ரஹ்மான், கமலுக்கு அம்மாவாக நடிக்கிறார்

55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் பிரபல இந்தி நடிகை வஹீதா ரஹ்மான். விஸ்வரூபம் 2 படத்தில் கமல் அம்மாவாக அவர் நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வஹீதா ரஹ்மான் ஒரு தமிழ் முஸ்லிம் பெண்மணி என்பது பலருக்குத் தெரியாது. செங்கல்பட்டில் பிறந்த இவரது தாய் மொழி தமிழ். மதம் சார்ந்த முறையில் உருது, இந்தியைக் கற்றுக் கொண்டவர். பின்னர் ஐதராபாத் போய், குருத்தப் பார்வையில் பட்டு ஹிந்தியில் நம்பர் ஒன் அந்தஸ்தைப் பெற்றவர்.

இந்தியில் கொடிகட்டிப் பறந்தாலும் வஹீதா ரஹ்மான் முதலில் நடித்தது இரு தமிழ்ப் படங்களில்தான். ஒன்று எம். ஜி. ஆரின் அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படம். அடுத்தது ஜெமினி கணேசன் நடித்த காலம் மாறிப்போச்சு. இரண்டுமே சூப்பர். ஹிட் இவர் அந்தப் படங்களில் நாயகி இல்லை என்றாலும், ராசியான நடிகை என்ற பெயர் கிடைக்க தொடர்ந்து நான்கு தமிழ்ப் படங்களில் நடித்தார்.

பின்னர் இந்தியில் சிஐடி படத்தில் தன் கேரியரைத் தொடங்கினார். ஏராளமான வெற்றிப் படங்களில் நடித்தார். திருமணத்துக்குப் பிறகு நடிக்காமல் இருந்த வஹீதா கணவர் இறந்தபிறகு 2002 லிருந்து மீண்டும் நடிக்க ஆரம்பித்தார்.

தமிழில் 55 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் நடிக்க வருகிறார் வஹீதா ரஹ்மான். என தகவல்கள் வெளியாகியுள்ளன. அந்தப் படம் விஸ்வரூபம் 2.

இந்தப் படத்தில் கமல்ஹாசனுக்கு அம்மாவாக நடிக்கிறாராம் வஹீதா. இந்தியிலும் விஸ்வரூம் 2 வெளியாகிறது. வஹீதா ரஹ்மான் நடிப்பது இந்தி ஏரியாக்களில் படத்துக்கு நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கும் என்பதால் வஹீதாவை ஒப்பந்தம் செய்துள்ளார் கமல்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]