ஹிஜ்ரி வருடம் 1434 துல்ஹிஜ்ஜஹ் மாதம் பிறை 02
விஜய வருடம் புரட்டாசி மாதம் 22ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, OCTOBER,08, 2013

Print

 
இளைப்பாறியோர் தினத்தை அர்த்தமுள்ளதாக ஆக்குவோம்!

இளைப்பாறியோர் தினத்தை அர்த்தமுள்ளதாக ஆக்குவோம்!

இளைப்பாறியோர் தினம் இன்று அனுஷ்டிப்பு

அரசாங்கம் அக்டோபர் 08ம் திகதியை இளைப்பாறியோர் தினமாக பெயரிட்டு (2009 முதல்) பல வருடங்கள் ஆகின்றன. இதற்கு முன் இத்தினம் இளைப்பாறியோர் சங்கங்களினால் நினைவு கூரப்பட்டது. இளைப்பாறியோர் தலைவர்களுக்கு பாராட்டு விழாவொன்று 2009ல் நடத்தப்பட்டது. அது பலராலும் பாராட்டப்பட்டது.

ஊர்வலம் செல்லவும், கூட்டம் நடத்தவும், கோரிக்கைகளை முன்வைக்கவும் இத்தினம் பயன்படுத்தப்பட்டது. உபசார விழாக்களும் நடத்தப்பட்டன.

வசதி குறைந்த நிலையில் அரச ஊழியர்கள் தமது பெற்றோர், மனைவி மக்கள் உறவினர்கள் ஆகியோரிடமிருந்து தூர இடங்களுக்கு சென்று சேவைக்காக அர்ப்பணம் செய்தனர்.

இளமை உழைப்பு, அறிவு ஆகியவற்றைச் செலவிட்டனர். இத்தகைய இளைப்பாறியோரின் கடந்தகால சேவைகளை இளைப்பாறியோர் தினமாக பார்ப்பது பெருமையான விடயமாகும்.

ஏனைய தேசிய தினங்களைப் போன்று இத்தினமும் கோலாகலமாக நினைவு கூரப்பட வேண்டும். சிரேஷ்ட இளைப்பாறியோர் சமூகத்தின் உடல், உள திருப்தியை வளர்க்கவும் இத்தினத்தை நினைவு கூர இளைப்பாற்றுச் சம்பளத் திணைக்களம் திட்டமிட்டுள்ளதாக இளைப்பாற்று சம்பள பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இதில் நாமும் ஆதரவளிப்பதற்காக பங்கெடுப்பது அவசியமாகும். இளைப்பாறியோருக்காக அர்ப்பணம் செய்த எமது முன்னோருக்கு நாம் பாராட்டு தெரிவிக்க வேண்டும். இணைப்பாறியோரின் நன்மைக்காக தீர்மானங்களை எடுத்து நிறைவேற்றியவர்களுக்கும் நன்றி செலுத்த வேண்டும்.

சம்பள முரண்பாடுகளும் நிலவி வந்துள்ளன. 01.01.97க்கு முன் இளைப் பாறிய அரச அதிபர் அதன் பின்பு இளைப்பாறிய அவரின் லிகிதரைப் பார்க்கிலும் குறைந்த இளைப்பாற்றுச் சம்பளம் பெற நேரிட்டது.

இதற்கு 02/2006 சுற்றறிக்கை மூலம் தீர்வு கிடைத்தது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு இதற்காக நாம் இன்றைய தினத்தில் நன்றி கூற வேண்டும். தற்போது 01.01.2006 இற்கு முன்னரும், அதன் பின்னரும் இளைப்பாறியோருக்கு இடையில் இளைப்பாற்றுச் சம்பள முரண்பாடுகள் காணப்படுகின்றன. இது தொடர்பாக ஜனாதிபதி கவனம் கொண்டிருப்பாரென நாம் அறிவோம். அதற்கும் துரித நிவாரணம் கிடைக்குமென்பது எமது நம்பிக்கை.

பொதுநிர்வாக, உள்நாட்டு விவகார அமைச்சராக இருந்த வஜிர அபேவர்தன, தற்போதைய வீடமைப்பு, நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச, சஜித் பிரேமதாச எம்.பி. ஆகியோருக்கும் நன்றிகள்.

புதிய இளைப்பாற்றுச் சம்பள பணிப்பாளர் நாயகம் ‘எமக்காக நாம் தரிசனத்துக்கு ஏற்ப P+ (Pension Plus)  என்ற புதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார். இளைப்பாறியோர் ஒன்று சேர்ந்து சுயபலத்தினால் எழுந்து நிற்கக் கூடிய பல்வேறு பலாபலன்கள் இதன் மூலம் கிடைக்குமென்பது எமது நம்பிக்கையாகும்.

எமது அரச சேவை இளைப்பாறியோர் நம்பிக்கை நிதியம் ‘நமக்காக நாம்’ கோட்பாட்டின் கீழ் இளைப்பாறியோரை அணிசேர்க்கும் அமைப்பாகும். நாடு தழுவிய ரீதியில் இது தரிசனத்துடன் 1999 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சட்டத்தின் கீழ் செயற்படுகிறது.

இளைப்பாறியோரின் நிலைமை, கெளரவம் ஆகியவற்றைப் பாதுகாத்து அவர்களின் சேமநலன்களை மேம்படுத்துவது இதன் நோக்கமாகும். 20 ரூபா மாதாந்த கொடுப்பனவு மூலம் ஆயிரக்கணக்கான நன்மைகளை வழங்குவது நிதியத்தின் நோக்கமாகும். 2002ல் மட்டும் 25 மில்லியன் ரூபா நன்மைகள் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

அக்டோபர் 8 ஆம் திகதி இளைப்பாறிய நமது தேசிய தினமாகும். நாம் ஒன்று சேரும் வருடமாக 2013 அக்டோபர் 08ம் திகதியைக் கருதுவோம்.

இளைப்பாற்றுச் சம்பளத் திணைக்களத்துடன் நெருக்கமான உறவுகளை ஏற்படுத்துவோம். அரச சேவை இளைப்பாறியோர் நம்பிக்கை நிதியத்தில் ஒன்று சேர்வோம். இளைப்பாறிய சங்கங்கள் சகலவற்றையும் ஒன்று சேர்ப்போம்.

இளைப்பாறியோர் தேசிய தினத்தை அர்த்தமிக்கதாக ஆக்குவோம்.

முன்னோடி இளைப்பாறியோர் தலைமைத்துவத்துக்கு நன்றிகள்.

இளைப்பாறிய சமூகத்துக்கு வெற்றி.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]