ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER,17, 2013

Print

 
ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் மோதிரம் ரூ. 42 இலட்சத்துக்கு ஏலம்

ஜேர்மனியின் சர்வாதிகாரி ஹிட்லரின் மோதிரம் ரூ. 42 இலட்சத்துக்கு ஏலம்

ஜேர்மனியின் சர்வாதிகாரியாக இருந்த ஹிட்லர் 2 ஆம் உலகப் போரின் போது உலகையே ஆட்டி படைத்தவராக இருந்தார். அவர் பயன்படுத்திய மோதிரம் ஒன்று அமெரிக்காவின் மேரிலேண்ட் மாகாணத்தில் உள்ள ஏல நிறுவனத்தில் ஏலத்துக்கு வந்தது.

இது குறித்து அதன் துணை தலைவர் ஆண்ட்ரஸ் கோர்ன்பெல்ட் கூறியதாவது:-

இந்த மோதிரம் மிகவும் திறமை வாய்ந்த பொற்கொல்லர்களால் செய்யப்பட்டுள்ளது. நாஜிக்கள் முத்திரை (ஸ்வஸ்திக் சின்னம்) பதிக்கப்பட்ட இந்த மோதிரம் ஜெர்மனியர்கள் மத்தியில் மிகவும் புகழ் பெற்றதாக விளங்கியது. சிறந்த கைவினை வேலைப்பாடுகளுடன் தங்கத்தில் செய்யப்பட்டுள்ள இந்த மோதிரத்தில் பவளம் பதிக்கப்பட்டுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]