ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER,17, 2013

Print

 
வாக்களிக்க தவறியோருக்கு நாளையும் சந்தர்ப்பம்

வாக்களிக்க தவறியோருக்கு நாளையும் சந்தர்ப்பம்

தபால் மூல வாக்களிப்பில் வாக்களிக்க தவறியவர்களுக்கு நாளை (18) வாக்களிப்பதற்கான சந்தர்ப்பத்தினை தேர்தல்கள் திணைக்களம் வழங்கியுள்ளது.

இதன்படி, நாளை (18) காலை 8.30 மணி முதல் நண்பகல் 12.30 மணிக்குள்ளாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகம் அல்லது கொழும்பிலுள்ள தேர்தல் செயலகத்திற்கு நேரில் சென்று தமது ஆள் அடையாளத்தை உறுதி செய்ததன் பின்னர் வாக்களிக்க முடியுமெனவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர் எம். மொஹமட் கூறினார்.

மூன்று மாகாண சபைகளுக்குமான தபால் மூல வாக்களிப்பு கடந்த 9, 10 ஆகிய தினங்களில் நடைபெற்றது. வாக்களிக்க தகுதி பெற்றும் அதனை தவறவிட்ட வர்களுக்காக எதிர்வரும் 14 ஆம் திகதி வரை ஏற்கனவே கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. அதற்கும் மேலதிகமாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரியவின் பணிப் புரையின் பேரில் இன்றும் நாளையும் விசேட சந்தர்ப்பம் பெற்றுக்கொடுக் கப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களின் வசதி கருதி இலங்கை முழுவதும் தபால் மூல வாக்களிப்பு நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை இத்தினம் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் காலநீடிப்புச் செய்யப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் திணைக்களம் உறுதியாக அறிவித்துள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]