ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER,17, 2013

Print

 
AICON, தனித்துவமிக்க Lifestyle Store

AICON, தனித்துவமிக்க Lifestyle Store

ஆர்பிகோ ஹைட்பார்க் கோர்னர் முற்றிலும் வித்தியாசமான லைவ்ஸ்டைல் ஸ்ரோர் ஒன்றை அண்மையில் ஆரம்பித்துள்ளது. மாலைநேர விருந்துபசாரம் ஒன்றுடன் ஆரம்பித்த AICON இன் அறிமுக விழாவில் பல கௌரவ அதிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

ஹைட்பார்க் கோர்னர் ஆர்பிகோவின் முதலாவது தளத்தில் அமைந்துள்ள AICON இல் Gift Ideas, Living Spaces, Fine Dining, Garden  ஆகிய பிரிவுகள் காணப்படுகின்றன.

மனதுக்கு மகிழ்ச்சியையும் இதமான உணர்வையும் வழங்கும் மண் சார் நிறங்களான பிரிக் ரெட், பிறவுண், கிறீன், பிளக் மற்றும் மென்மையான நிறங்களும் குளிர்ச்சியான ஒளியு+ட்டலும் இதன் வடிவமைப்பில் பயன்படுத்தப்பட்டுள்ளன. உள்ளே நுழைந்தவுடனேயே மனதில் உற்சாகமான புத்துணர்வு பிறப்பதால் புதுவிதமான n'hப்பிங் அனுபவத்தை வாடிக்கையாளர்கள் பெறமுடிகின்றது.

Gift Ideas பிரிவில் கண்களைக் கவரும் அழகிய நவீன வடிவமைப்புக்களைக் கொண்ட அலங்காரப் பொருட்களையும் பரிசுப் பொருட்களையும் காணமுடியும். அனைவருக்கும் பிடித்தமான விதத்தில் புதுமையான கருப்பொருட்களைக் கொண்டதாக இந்த பரிசுப் பொருட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

Livng Spaces பிரிவில் மென்மையான வர்ணங்களில் உடலுக்கு இதமான வகையில் தயாரிக்கப்பட்ட படுக்கை லினன் முதல் பாத்-டவல் வரை கிடைக்கின்றன. வித விதமான அழகிய பு+ச்செடிகளைக் கொண்ட சாடிகள் முதல் பு+ந்தோட்டங்களில் வைக்கும் விளக்குகள் வரை புயசனநn பிரிவில் காணலாம்.

நேர்த்தியாக வடிவமைக்கப்பட்ட மேசையில் பயன்படுத்தும் டேபிள்வெயார், முதல் சமையலறைக்கோ அல்லது சாப்பாட்டறைக்கோ பொருத்தமான தளபாடங்கள் வரை குiநெ னுiniபெ பிரிவில் காணப்படுகின்றன. தம்முடைய இல்லத்துக்கும் வதிவிடத்துக்கும் பொருத்தமானவற்றை நிதானமாகச் சுற்றிப் பார்த்து தரம் அறிந்து கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் வாடிக்கையாளர்களுக்குத் தாராளமாக உள்ளது.

இங்கு வழங்கப்படும் பொருட்கள் பருவ காலத்துக்கேற்ப மாறுபடுகின்றன. இவை அனைத்தும் வழமையை விட வித்தியாசமான பொருட்களாக அமைந்திருக்கும். சிறுவர்கள் விளையாடி மகிழ்வதற்காகப் பல அம்சங்களும் உள்ளன. இக்காட்சியறையின் பெயரான AICON இல் முதல் எழுத்து (யு) ஆர்பிகோவையும் iஉழn எனும் பதம் தனித்துவ இலச்சினையையும் குறிக்கின்றது. ஆர்பிகோ வழமையாக வழங்கும்

தனது தயாரிப்புக்களை விட இவை அனைத்து விதத்திலும் மாறுபட்டவை என்பதை இப்பெயர் குறிக்கின்றது. வாடிக்கையாளர் விசேடமானது என்று கருதும் தயாரிப்புக்களை ஆர்பிகோ தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகின்றது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]