ஹிஜ்ரி வருடம் 1434 துல்கஃதா மாதம் பிறை 10
விஜய வருடம் புரட்டாசி மாதம் 01ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY, SEPTEMBER,17, 2013

Print

 
உலக வர்த்தக மையத்தில் ஹமீடியாவின் ஆடவர் ஆடை மையம்

உலக வர்த்தக மையத்தில் ஹமீடியாவின் ஆடவர் ஆடை மையம்

இலங்கையின் ஆடவர் ஆடைகள் உற்பத்தித் துறையில் முன்னணியில் திகழும் ஹமீடியா நிறுவனமானது தனது வர்த்தகக் குறியீடு, உற்பத்திகள் மற்றும் தனது சேவைகளின் சிறப்புத்துவத்தை கொழும்பு நகரின் கேந்திர முக்கியத்துவமிக்க இடமாக பிரபலமாகியுள்ள பரபரப்புமிக்க உலக வர்த்தக மையத்திற்கு  (WTC) கொண்டு சென்றுள்ளது.

இப்பிரத்தியேகமான ஹமீடியா ஆடவர் ஆடை காட்சியறையின் திறப்பு விழாவில் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரான அஞ்சலோ மெத்தியூஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார். அத்துடன் ஹமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பெளசுல் ஹமீட் அவர்களும் இந்நிகழ்வுக்கு வருகை தந்திருந்தார்.

கொழும்பு உலக வர்த்தக மைய கட்டடத் தொகுதியிலுள்ள கிழக்குக் கோபுரத்தின் கீழ்த்தளத்தில் உபாய ரீதியான முறையில் நிறுவப்பட்டுள்ள 4000 சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த ஹமீடியா காட்சியறையானது, ஹமீடியா நிறுவனத்திற்கு புகழைத் தேடித்தந்துள்ள பிரத்தியேகமான ஆடவர் ஆடைகளுக்காக முழுமையாக அர்ப்பணிக்கப்பட்டதாக காணப்படும்.

புதிய வடிவமைப்புக்கள், வர்ணங்கள் மற்றும் துணிகளில் தயாரிக்கப்பட்ட ஹமீடியா நிறுவனத்தின் பெருமைக்குரிய முறைசார் மற்றும் கசுவல் ஆடைகள், நேர்த்தியான (ஸ்மார்ட்) கசுவல் ஆடைகள், விருந்துபசார நிகழ்வு மற்றும் வைபவங்களுக்கு பொருத்தமான ஆடைகள் போன்ற பரந்துபட்ட வகைகளிலான ஆடைத் தெரிவுகளை இக்காட்சியறை தன்னகத்தே கொண்டிருக்கும்.

புளகாங்கிதம் அடைந்தவரான ஹமீடியா நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் பெளசுல் ஹமீட் கூறுகையில், “எவ்வித சந்தேகமுமின்றி, தலைநகரிலுள்ள மிகவும் பிரபலமான ஒரு கூட்டாண்மை முகவரியாகத் திகழ்கின்ற உலக வர்த்தக மையத்தில் எமது காட்சியறையின் கதவுகளை திறந்து வைப்பதையிட்டு எனது அணியினரும் தனிப்பட்ட ரீதியில் நானும் மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம்.

நிறைவேற்று அதிகாரிகள், முகாமையாளர்கள் போன்ற பல நூற்றுக்கணக்கான கூட்டாண்மை துறைசார் இலங்கையரை கவர்ந்திழுக்கக்கூடிய உபாய ரீதியிலான ஒரு அமைவிடமாக இது காணப்படுகின்றது. உண்மையில் அவ்வாறான நபர்களே எமது அடிப்படை இலக்கு வாடிக்கையாளர்களாகவும் உள்ளனர்” என்றார்.

“சில தசாப்தங்களுக்கு முன்பிருந்ததைப் போலன்றி இன்று இலங்கையிலுள்ள ஆடவர்கள் தமது ஆடைகள் தொடர்பில் மிகவும் அக்கறையுடையவர்களாக இருக்கின்ற அதேநேரம் எல்லா நேரங்களிலும் தம்மளவில் சிறப்பாக தோற்றமளிப்பதற்கும் விரும்புகின்றனர். இலங்கையில் முறைசார் ஆடைகள் துறையில் தலைமை வகிக்கும் நிறுவனம் என்ற வகையில், முழுமையான ஆடவர் தீர்வுகளை அவர்களது வாயிற்படிக்கு நாம் கொண்டு சென்று சேர்த்துள்ளோம்” என்று ஹமீட் குறிப்பிட்டார்.

ஹமீடியா நிறுவனத்தின் புதிய அமைவிடமாக திகழும் உலக வர்த்தக மையத்தில் அமைந்துள்ள இக்காட்சியறையானது லீபொண்ட், என்வோய் மற்றும் பிசி ஆகிய நம்பிக்கையை வென்ற சொந்த வர்த்தகக் குறியீடுகளுடன் லூயிஸ் பிலிப்பி, வன் ஹியுசன், அலென் சொலி மற்றும் அடிடாஸ் போன்ற முன்னணி சர்வதேச வர்த்தக குறியீடுகள் பலவற்றையும் காட்சிப்படுத்துகின்றது.

ஹமீடியா நிறுவனத்தின் உலக வர்த்தக மைய காட்சியறை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகின்ற ஒரு தனிச் சிறப்புமிக்க சேவையாக தமது ‘அளவுக்கேற்ப ஆடைகளை தைத்துக்கொள்ளும்’ (Bespoke) வசதி காணப்படுகின்றது. இவ்வசதியின் ஊடாக, உலகத் தரமிக்க பல்வேறு துணி வகைகளைப் பயன்படுத்தி தமக்குத் தேவையான ஆடையை அளவு கொடுத்து பிரத்தியேகமாக தைத்துக் கொள்ள முடியும்.

இலங்கையிலும் சர்வதேச சந்தைகளிலும் மிக விரைவாக விஸ்தரிக்கப்பட்டுச் செல்லும் வாடிக்கையாளர் தளத்தை கொண்டியங்கும் இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை நிபுணத்துவ நிறுவனம் எனும் பொறாமைப்படத்தக்க அந்தஸ்தை ஹமீடியா நிறுவனம் அனுபவித்து வருகின்றது. கூடுமானவரை தம்மளவில் சிறப்பாக தோற்றமளிக்க விரும்புகின்ற இலங்கையின் பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், நிறைவேற்று அதிகாரிகள், கூட்டாண்மை நிறுவன உயரதிகாரிகள், மணமகன்கள் போன்ற பல தரப்பினரதும் முதலாவது விருப்பத் தெரிவாக ஹமீடியா திகழ்கின்றது.

ஆடவர் ஆடை தொடர்பாக கடைப்பிடித்துவரும் பேரார்வத்தின் ஊடாக பொது மக்களின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் வாழ்க்கைப் போக்கு ஆகியவற்றை மேம்படுத்துவது எனும் தூரநோக்கின் அடிப்படையில் செயற்படுகின்ற ஹமீடியா நிறுவனமானது நேர்மை மற்றும் நம்பிக்கை என்பவற்றுடன் வர்த்தகக் குறியீட்டை பின்னிப் பிணைந்துள்ள தனது அடிப்படை பெறுமதிகளில் தொடர்ந்தும் உறுதியாக செயற்பட்டு வருகின்றது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]