ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 14
விஜய வருடம் ஆவணி மாதம் 06ம் திகதி வியாழக்கிழமைை
THURSDAY, AUGUST, 22, 2013

Print

 
விக்கிலீக்ஸ¤க்கு தகவல் கசியவிட்டவருக்கு 35 ஆண்டு சிறை

விக்கிலீக்ஸ¤க்கு தகவல் கசியவிட்டவருக்கு 35 ஆண்டு சிறை

விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு அமெரிக்க இராணுவ அரசுத்துறை ரகசியங்களை கசியவிட்ட அந்நாட்டு இராணுவ வீரருக்கு 35 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து, இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஜூலியன் அசாஞ்சே நடத்தி வரும் விக்கிலீக்ஸ் இணைய தளம் அமெரிக்க ரகசிய நடவடிக்கைகள் பல வற்றை ஆதாரங்களு டன் சேகரித்து அவற்றை வெளியுலகுக்கு அம்பலப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த இணையதளத்துக்கு அமெரிக்க இராணுவ வீரர் பிராட்லி மேனிங் (25) பல்வேறு ரகசியத் தகவல் அளித்து குற்றம் புரிந்ததை நீதிமன்றம் கடந்த வாரம் உறுதி செய்தது. உளவுச் சட்டத்தை மீறுதல் உள்ளிட்ட 20 குற்றச் சாட்டுகள் அவர் மீது சுமத்தப்பட்டிருந்தது.

அவருக்கு 60 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க வேண்டுமென்று அரசுத் தரப்பில் வாதாடப் பட்டது.

மேனிங் வெளியிட்ட தாக கூறப்படும் சில ஆவணங்கள், பின்னர் அரசால் பகிரங்கப்படுத்தப்பட்டவை தான் எனவே அவருக்கு 25 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை விதிக்கக் கூடாது என்று மேனிங் தரப்பில் வழக்கறிஞர் வாதிட்டார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]