ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 14
விஜய வருடம் ஆவணி மாதம் 06ம் திகதி வியாழக்கிழமைை
THURSDAY, AUGUST, 22, 2013

Print

 
புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாப்பு

புதிய அரசியலமைப்பில் ஜனாதிபதிக்கு ஆர்ப்பாட்டக்காரர்களிடம் இருந்து பாதுகாப்பு

எகிப்து இடைக்கால அரசினால் திருத்தங்கள் செய்யப்பட்டிருக்கும் புதிய அரசியலமைப்பில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் மூலம் ஜனாதிபதியை பதவி கவிழ்க்கும் சாத்தியங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக துருக்கி செய்திச் சேவையான அனடொலு குறிப்பிட்டுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்களைக் காரணம் காட்டி ஜனநாயக முறையில் தேர்வான ஜனாதிபதி மொஹமட் முர்சியை இராணுவம் கடந்த ஜுலை 3 ஆம் திகதி பதவி கவிழ்த்தது. ஆனால் அரசியலமைப்பின் புதிய திருத்தத்தில் ஜனாதிபதியை ஆர்ப்பாட்டத்தின் மூலம் பதவிவிலக்க முடியாது என குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த ஆர்ப்பாட் டம் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரியே என்று விபரிக்கப்பட்டுள்ளது.

இஸ்லாமிய ஆதரவுகொண்ட அரசியலமைப்பில் திருத்தங்கள் கொண்டுவந்த நிபுணர் குழுவின் தலைவர் அலி அவாத்தை மேற்கோள் காட்டி இந்த செய்தி வெளியிடப்பட்டு ள்ளது. இதில் சர்வஜன வாக்கெடுப்பின் மூலம் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்பில் உள்ளடக்கப்பட்டிருந்த 236 கட்டுரை 198 ஆக குறைக்கப் பட்டுள்ளது. இதன்படி முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக்கின் தேசிய ஜனநாயக கட்சியை தடைவிதிக்கும் சட்டம் அகற்றப்பட்டுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]