ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 14
விஜய வருடம் ஆவணி மாதம் 06ம் திகதி வியாழக்கிழமைை
THURSDAY, AUGUST, 22, 2013

Print

 
அவுஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம்

5வது ஆஷஸ் டெஸ்ட்:

அவுஸ்திரேலிய அணி சிறப்பான தொடக்கம்

இங்கிலாந்தில் இடம்பெற்றுவரும் ஆஷஷ் தொடரின் 5ஆவது போட்டியின் முதல்நாள் முடிவில் அவுஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. ஷேன் வோற்சனின் அற்புதமான சதத்தின் உதவியுடன் அவ்வணி சிறப்பான நிலையைப் பெற்றுள்ளது.

தி ஓவல் மைதானத்தில் இடம்பெறும் இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் பெற்றிபெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி முதல் நாள் முடிவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 307 ஓட்டங்களைப் பெற்றுச் சிறப்பான நிலையில் காணப்படுகிறது.

முதலாவது விக்கெட்டாக டேவிட் வோனரை 11 ஓட்டங்களுக்கே இழந்த அவ்வணி சார்பாக இரண்டாவது விக்கெட்டுக்காக கிறிஸ் றொஜர்ஸ், ஷேன் வொற்சன் இருவரும் 107 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். அடுத்துக் களமிறங்கிய மைக்கல் கிளார்க் விரைவாகவே ஆட்டமிழக்க 3 விக்கெட்டுக்களை இழந்து 144 ஓட்டங்களுடன் காணப்பட்ட அவ்வணி சார்பாக ஷேன் வொட்சன் ஸ்டீவன் ஸ்மித் இருவரும் 145 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.

துடுப்பாட்டத்தில் அவுஸ்திரேலிய அணி சார்பாக ஷேன் வொற்சன் 176 ஓட்டங்களைக் குவித்தார். தவிர, ஸ்டீவன் ஸ்மித் ஆட்டமிழக்காமல் 23 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணி சார்பாக ஜேம்ஸ் அன்டர்சன் 2 விக்கெட்டுக்களையும் ஸ்ருவேர்ட் பிரோட், கிறேம் ஸ்வான் இருவரும் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]