ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 14
விஜய வருடம் ஆவணி மாதம் 06ம் திகதி வியாழக்கிழமைை
THURSDAY, AUGUST, 22, 2013

Print

 
முதலில் உன்னைத் திருத்து

முதலில் உன்னைத் திருத்து

தவளை ஒன்று காட்டில் இருந்த பாறை ஒன்றின் மேல் அமர்ந்தது. “விலங்குகளே! இங்கே வாருங்கள்” என்று அழைத்தது.

தவளை என்ன சொல்லப் போகிறது என்பதைக் கேட்கும் ஆவலில் எல்லா விலங்குகளும் அங்கே வந்து கூடின.

அவற்றைப் பார்த்துத் தவளை, “விலங்குகளே! நான் மருத்துவ நூல்களை எல்லாம் நன்கு படித்துத் தேர்ச்சி பெற்றுள்ளேன். எந்த நோயாக இருந்தாலும் என்னால் குணப்படுத்த முடியும். நோயாளி யாராக இருந்தாலும் என்னிடம் மருந்து பெறாலம்” என்றது.

மருத்துவர் வந்திருக்கிறார் என்பதைக் கேட்டு எல்லா விலங்குகளும் மகிழ்ச்சி அடைந்தன.

அங்கிருந்த நரி “தவளையே! நீ சிறந்த மருத்துவன் என்பது உண்மையானால் அவலட்சணமான உன் முகத்தை ஏன் அழகு படுத்திக் கொள்ளக் கூடாது? உன் முதுகெங்கும் தேமல் உள்ளதே. அதைப் போக்கிக் கொள்ளக் கூடாதா? பானை மாதிரி வீங்கியுள்ள உன் வயிற்றைச் சிறிது குறைத்துக் கொள்ளக் கூடாதா? முதலில் உன்னிடம் உள்ள நோய்களைக் குணப்படுத்திக் கொண்டு எங்களிடம் வா. உன்னிடம் மருத்துவம் பார்க்கிறோம்” என்றது.

இதைக் கேட்ட தவளை தண் ணீருக்குள் பாய்ந்து மறைந்தது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]