ஹிஜ்ரி வருடம் 1434 ஷவ்வால் மாதம் பிறை 15
விஜய வருடம் ஆவணி மாதம் 07ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, AUGUST , 23 , 2013
வரு. 81 இல. 200
 

ஊவாவின் பெருந்தோட்ட பகுதிகளிலிருந்து மதுவினை ஒழித்துக்கட்டுவதற்கு அமைச்சர் செந்தில் தொண்டமான் தலைமையில் பாரிய விழிப்புணர்வுப் போராட்டம்

ஊவாவின் பெருந்தோட்ட பகுதிகளிலிருந்து மதுவினை ஒழித்துக்கட்டுவதற்கு அமைச்சர் செந்தில் தொண்டமான் தலைமையில் பாரிய விழிப்புணர்வுப் போராட்டம்

அதிகமான தோட் டங்களில் இவ் வாறான பொது இடங்களை அண்மித்தே மதுபானசாலைகள் அமைக் கப்பட்டிருக்கின்றன.

பெருந்தோட்டப்புறங்களில் உற்பத்தி செய்யப்படும் சட்ட விரோத மதுவும் தோட் டப்புறங்களில் அமைக்கப்படும் மதுபானசாலைகள் ஆகிய இரண்டுமே எமது சமூகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாகவே உள்ளது. இத்தகைய செயற் பாடுகள் மலையக பெருந் தோட்டங்களில் அரசியல் பின்புலத்துடனேயே நடை பெறுகின்றன. அரசியல் இலாபங்களுக்காக அரசியல் வாதிகள் இந்தவிடயங்கள் குறித்து கவனம் செலுத்துவதை தவிர்த்து வருகின்றார்கள். ஆனால் ஊவா மாகாணத்தில் கடந்த மாகாண சபைத் தேர்தலில் இ. தொ. கா.வின் சார்பில் போட்டியிட்டு வெற்றியீட்டிய செந்தில் தொண்டமான் அவர்கள் அரசியல் பிரவேச காலத்திலிருந்தே ஊவா மாகாணத்தில் பெருகிவரும் சட்டவிரோத மது உற்பத்தியினை தடைசெய்வதற்கும், தோட்டங்களில் மதுபானசாலைகள் அமைக்கப்படுவதை நிறுத்துவதற்கும் பல நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றார்.

இதன் அடிப்படையில் கடந்த மகளிர் தினத்தினையொட்டி ஊவா மாகாண பெருந்தோட்டங்களைச் சேர்ந்த 3000 இற்கும் அதிகமான யுவதிகளை கொண்டு ஏற்பாடு செய் திருந்த ‘தோட்டங்களில் இருந்து முற்றாக மதுவினை ஒழிப்போம்’ என்ற தொனிப்பொருளில் பேரணி பதுளை நகரில் நடைபெற்றது.

இதன்போது அனைத்து யுவதிகளாலும் கைச்சாத்திட்ட மகஜர் ஊவா மாகாணத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபரிடம் கையளிக்கப் பட்டது. இதனைத் தொடர்ந்து பல தோட்டங்களில் பொலிஸாரின் நடவடிக்கை மூலம் சட்டவிரோத மது உற்பத்தி நிறுத்தப்பட்டது. ஆயி னும் இன்னும் பல தோட்டங்களில் இவ்வாறான சட்டவிரோத மது உற்பத்தியும் அதனைத் தொடர்ந்து தோட்டங்களில் மதுபானசாலைகள் திறக்கப்படுவதும் அதிகரித்த நிலையில் காணப்பட்டது. இதற்குக் காரணம் எமது சமூகத்தினருக்கிடையே இவ்வாறான சமூக விரோத செயற்பாடுகளை செய்வோரை ஆதரிப்பதேயாகும். இதனை தொடர்ந்தே இம்முறை மீண்டும் ஒருமுறை வழுவான இவ்விடயம் பற்றி அக்கறை ஏற்படுத்த வேண்டும் எனும் நோக்கில் ஊவாவில் பெருந்தோட்டப் பகுதிகளைச் சேர்ந்த யுவதிகள், இளைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சுமார் 5,000 இற்கும் அதிகமானோரைக் கொண்டு பதுளை நகரில் மாபெரும் கவனயீர்ப்பு போராட்டம் +(திn:w செந்தில் தெண்டமான் அவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்டு பேரணியாக சென்று ஊவா மாகாண ஆளுநர் சி. நந்தமெதிவ் அவர்களிடமும், ஊவா மாகாண முதலமைச்சர் சஷிந்திர ராஜபக்ஷ அவர்களிடமும் வேண்டுகோள் அடங்கிய பத்திரம் கையளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கலந்துகொண்ட மக்களிடம் உரையாற்றிய முதலமைச்சர் அவர்கள் உண்மையில் இவ்விடயத்தை யொட்டி பெருமைப்படுவதாகவும் ஊவா மாகாணத்தில் தமிழ் பேசும் மக்கள் அமைச்சர் செந்தில் தொண்டமானின் வருகைக்கு பின்னர் சிறந்த இலக்கை நோக்கி பயணம் செய்கின்றனர். அவர்களை வழிநடத்துவதில் அமைச்சர் முன்னின்று செயற்படுகின்றார். அதேபோன்று இலங்கைத் தொழிலாளர் காங்கிரசிற்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எமது மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்கும் மதுவினை தோட்டப் பகுதிகளிலிருந்து சீக்கிரம் ஒழித்துக்கட்டுவேன். இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு வழுவான கட்டளைகளை பிறப்பித்து கூடிய விரைவில் தோட்டங்களை சுபீட்சமான இடமாக்குவேன் என்றும் தெரிவித்தார்.

இதன்போது சட்டவிரோதமான மது உற்பத்தி, பாவனை தொடர்பில் நேரடியாக ஊவா மாகாண பிரதி பொலிஸ்மா அதிபர் கவனத்திற்கு கொண்டுவருவது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி