ஹிஜ்ரி வருடம் 1434 ரஜப் மாதம் பிறை 30
விஜய வருடம் வைகாசி மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, JUNE, 10, 2013

Print

 
சவூதியிலிருந்து 2 மாதங்களுள் 180,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றம்

சவூதியிலிருந்து 2 மாதங்களுள் 180,000 வெளிநாட்டு தொழிலாளர்கள் வெளியேற்றம்

சவூதி அரேபியாவில் இருந்து ஒரு இலட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டு தொழிலாளர்கள் கடந்த 2 மாதங்களில் வெளியேறியுள்ளனர்.

2013 ஜனவரியில் இருந்து இதுவரை 3 இலட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டினர் வெளியேறியுள்ளதாகவும் இவர்கள் அனைவரும் உரிய ஆவணங்களின்றி சவூதி அரேபியாவில் தங்கியிருந்தவர்கள் என்றும் இவர்கள் மீது அபராதம் ஏதும் விதிக்கப்படவில்லை என்றும் அந்நாட்டின் கடவுச் சீட்டு துறை செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார்.

சவூதியில் வாழ்பவர்களுக்கு ‘நிடாகட்’ சட்டத்தை சவூதி அரசு அறிவித்த பின்னர் அந்நாட்டில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருக்கும் வெளிநாட்டினர் ஜூலை மாதத்திற்குள் வெளியேறி விட்டால் நடவடிக்கை எடுக்கப்படமாட்டாது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனையடுத்து 8 இலட்சத்துக்கும் மேற்பட்ட வெளிநாட்டு தொழிலாளர்களில் 3 இலட்சத்து 80 ஆயிரம் பேர் கடந்த மாதம் வரை வெளியேறியுள்ளனர்.

ஜூலை 3 ஆம் திகதிக்குள் இறுதிக்கெடு முடிவடைகிறது. அதன் பின்னர் சவூதியில் உரிய ஆவணங்களின்றி யாராவது தங்கியிருப்பது கண்டறியப்பட்டால் அவர்களுக்கு 2 ஆண்டு சிறை தண்டனையும் ஒரு இலட்சம் ரியால்கள் அபராதமும் விதிக்கப்படும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]