ஹிஜ்ரி வருடம் 1434 ரஜப் மாதம் பிறை 30
விஜய வருடம் வைகாசி மாதம் 27ம் திகதி திங்கட்கிழமை
MONDAY, JUNE, 10, 2013

Print

 
இலங்கையின் டெஸ்ட் நடுவர் கே.ரி பிரான்சிஸ் காலமானார்

இலங்கையின் டெஸ்ட் நடுவர் கே.ரி பிரான்சிஸ் காலமானார்

இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் நடுவராக கடமையாற்றிய கந்தையா பிரான்சிஸ் தமது 73 ஆவது வயதில் காலமானார்.

நீரிழிவு நோயின் காரணமாக சிகிச்சை பெற்று வந்த பிரான்சிஸ் நேற்று முன்தினம் வைத்தியசாலையில் வைத்து காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரிழிவு நோயின் காரணமாக 73 வயதான பிரான்சிஸின் முழங்காலிற்கு கீழுள்ள பகுதி அகற்றப்பட்டிருந்தது. சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நடுவர்களுக்கான செயற்குழுவின் உறுப்பினராக கந்தையா பிரான்சிஸ் விளங்கினார்.

1982 ஆம் ஆண்டு முதல் 1999 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் 25 டெஸ்ட் போட்டிகளிலும், 1996 ஆம் ஆண்டு 1999 ஆம் ஆண்டு உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிகள் உள்ளடங்கலாக 56 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளிலும் பிரான்சிஸ் நடுவராக கடமையாற்றியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் அணியின் முதலாவது டெஸ்ட் போட்டியான 1982 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் இவர் நடுவராக கடமையாற்றியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

புகையிரத நிலைய ஊழியராக தமது தொழிலை ஆரம்பித்த பிரான்சிஸ் அவர்கள், இலங்கை அரசாங்கத்தின் ரயில்வே அணிக்காக பல போட்டிகளில் உதைபந்து மற்றும் கிரிக்கெட் விளையாடியுள்ளார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]