ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 08
நந்தன வருடம் பங்குனி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, MARCH, 21, 2013

Print

 
காசாவிலிருந்து இஸ்ரேலுக்கு ரொக்கெட் தாக்குதல்

காசாவிலிருந்து இஸ்ரேலுக்கு ரொக்கெட் தாக்குதல்

அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா இஸ்ரேலுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சந்தர்ப்பத்தில் காசாவிலிருந்து நேற்று இரு ரொக்கெட்டுகள் இஸ்ரேலை தாக்கியுள்ளன. இதில் ஒரு ரொக்கெட் இஸ்ரேலின் செட்ரோட் நகரின் வீடோன்றின் முற்றவெளியில் விழுந்து சிறு சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. மற்ற ரொக்கெட் வெறும் நிலப்பரப்பொன்றில் விழுந்துள்ளது. இதனால் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என இஸ்ரேல் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த ரொக்கெட் தாக்குதலுக்கு உடனடியாக எவரும் பொறுப்பேற்க வில்லை. இஸ்ரேலுக்கும் ஹமாஸ¤க்கும் இடையில் கடந்த நவம்பரில் எட்டுநாள் தாக்குதலைத் தொடர்ந்து இடம்பெற்ற யுத்த நிறுத்த உடன்படிக்கைக்கு பின்னர் இஸ்ரேல் மீது காசாவில் இருந்து நடத்தப்படும் இரண்டாவது ரொக்கெட் தாக்குதல் சம்பவம் இதுவாகும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]