ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 08
நந்தன வருடம் பங்குனி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, MARCH, 21, 2013

Print

 
பாகிஸ்தான் அகதிகள் முகாமில் குண்டுவெடிப்பு:

பாகிஸ்தான் அகதிகள் முகாமில் குண்டுவெடிப்பு:

13 பேர் பலி

வடமேற்கு பாகிஸ்தானில் நவஷேரா அருகில் உள்ள ஜலோசாய் அகதிகள் முகாமில் நேற்று பயங்கர குண்டு வெடிப்பு இடம்பெற்றது. முகாமில் உள்ளவர்களுக்கு மானிய பொருட்கள் வழங்கப்பட்டுக் கொண்டிருந்த போது கார் தரிப்பிட பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கார் திடீரென வெடித்துச் சிதறியது.

இதில் அப்பகுதியில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்டனர். ஏராளமான வாகனங்கள் நொறுங்கின. இந்த விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் இறந்தனர். 30 பேர் பலத்த காயம் அடை ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]