ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 08
நந்தன வருடம் பங்குனி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, MARCH, 21, 2013

Print

 
பாகிஸ்தானுக்கு 235 இலக்கு

பாகிஸ்தானுக்கு 235 இலக்கு

தென்னாபிரிக்காவுடனான நான்காவது ஒருநாள் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு 234 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

டர்பனில் நேற்று நடைபெற்ற போட்டியின் நாணய சுழற்சியில் வென்று முதலில் ஆடிய தென்னாபிரிக்க அணி முதல் இரண்டு பந்துகளுக்கும் இரண்டு விக்கெட்டுகளை பறிகெடுத்தது. எனினும் மத்திய வரிசையில் இணைந்த அணித் தலைவர் டிவிலியர்ஸ் (75) டேவிட் மில்லர் (67) ஆகியோர் 5 வது விக்கெட்டு க்காக 115 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்றனர்.

இதன் மூலம் தென்னாபிரிக்க அணி 50 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 234 ஓட்டங்களை பெற்றது. பாகிஸ்தான் சார்பில் மொஹமட் இர்பான், மொஹமட் ஹபீஸ் மற்றும் சயீட் அஜ்மல் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இரு நாடுகளுக்கும் இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் தென்னாபிரிக்கா 2-1 என முன்னிலையில் உள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]