ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 08
நந்தன வருடம் பங்குனி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, MARCH, 21, 2013

Print

 
சிம்பாப்வே 175 ஓட்டங்களுக்கு சுருண்டது

சிம்பாப்வே 175 ஓட்டங்களுக்கு சுருண்டது

மேற்கிந்திய தீவுகளுடனான இரண்டாவது டெஸ்டில் சிம்பாப்வே அணி முதல் இன்னிங்ஸில் 175 ஓட்டங்களுக்கே சுருண்டது.

டொமினிக்காவில் நேற்று முன்தினம் ஆரம்பமான போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட சிம்பாப்வே அணி ஆரம்பம் முதல் விக்கெட்டுகளை தாரைவார்த்தது. இதன்மூலம் அந்த அணி 60.5 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 175 ஓட்டங்களையே பெற்றது.

அணித் தலைவர் பிரண்டன் டைலர் அதிகபட்சமாக 33 ஓட்டங்களை பெற்றார். மேற்கிந்திய அணி சார்பில் ஷில்லிங்போர்ட் 5 விக்கெட்டுகளையும் சாமுவேல்ஸ் 3 விக்கெட்டுகளையும் பதம்பார்த்தனர்.

தொடர்ந்து தனது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்து சிம்பாப்வே அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்டுகளை இழந்து 114 ஓட்டங்களை பெற்றது. ஆரம்ப வீரர் கிறிஸ் கெயில் 84 பந்துகளில் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களை பெற்றார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]