ஹிஜ்ரி வருடம் 1434 ஜுமாதல் ஊலா மாதம் பிறை 08
நந்தன வருடம் பங்குனி மாதம் 08ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, MARCH, 21, 2013

Print

 
குர்ஆனிய கல்வியின் முக்கியத்துவம்

குர்ஆனிய கல்வியின் முக்கியத்துவம்

இன்றைய உலகம் என்றுமே இல்லாதவாறு வஸ்துக்களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. அந்த வஸ்துக்களின் மோகம் பல் இன மக்களையும் படுபாதாளத்துள் கொண்டுபோய்ச் சேர்க்கக் கூடிய அதே நேரம் குறிப்பாக ஈமானிய உள்ளங்களையும் வெகுவாகத் தாக்கக் கூடிய கொடு நோயாகவே இருக்கின்றது. யஹுதியத்தையும், நஸ்ரானியத்தையும் ஈமானிய உள்ளங்களிலும் நுழையவைக்க திட்டமிடப்பட்ட சதி முயற்சிகள் உலகளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுகின்றன. கொலையும், கொள்ளையும், மதுவும், மாதுவும், களவும், கபZகரமும், சூதும், வாதும், பொய்யும், பொறாமையும், வட்டியும் அராஜகமும் இன்று சர்வசாதாரணமாகிவிட்டன.

இத்தகைய நிலைமையில் ஏகத்துவக் கலிமாவை மொழிந்த ஒவ்வொரு முஸ்லிமும் ஈமானிய எதிர்நீச்சல் போடவேண்டிய நிர்ப்பந்த நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒவ்வொரு முஸ்லிமுடைய வாழ்க்கையின் நோக்கமும் குறிக்கோளும் சுவனபதியை அடைவது தான். இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு முஸ்லிமுடைய சுவனபாதைக்கும் தடைக்கல்லாக இருக்கக் கூடிய யஹுதியத்தையும் நஸ்ரானியத்தையும் ஷைத்தானியத்தையும் உள்ளங்களில் குடிபுகவிடாமல் தடுப்பது முக்கிய தேவையாக இருக்கின்றது. இதற்காகவே குர்ஆனைக் கற்றுத் தெளிவதும், ஷரீஆவை விளங்குவதும் ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாக இருக்கின்றது. அல்லாஹுத் தஆலா குர்ஆனிலே கூறுகின்றான்.

‘அவர்கள் இந்தக் குர்ஆனை ஆராய்ந்து பார்க்கமாட்டார்களா? அல்லது (அவர்களுடைய) இதயங்கள் மீது அவற்றிற்குரிய பூட்டுகள் போடப்பட்டு இருக்கின்றனவா?’ (47 : 24)

இவ்வாறு குர்ஆனை விளங்குவதின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது. இன்னும் குர்ஆனைத் திருத்தமாக ஓதுவதைப் பற்றி அல்குர்ஆனில்,

'வரத்திலில் குர்ஆன் தர்தீலா' (73 : 04) ‘குர்ஆனை நன்கு திருத்தமாக நிறுத்தி நிறுத்தி ஒதுவீராக’ எனவும் அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

இன்னும் நிச்சயமாக அல்லாஹ் அல்குர்ஆனை அது இறக்கப்பட்ட பிரகாரமே ஓதப்படுவதை விரும்புகின்றான் என நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸைத்பின் ஸவித் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். எனவே குர்ஆனை தெளி வாக ஓதுவதற்கு தஜ்வீத கலையைக் கற்பது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கட்டாயக் கடமையாகும். மேலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'குர்ஆனைக் கற்றுக் கொள்ளுங்கள். மக்களுக்கும் கற்றுக் கொடுங்கள். மார்க்கக் கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள். மக்களுக்கும் கற்றுக் கொடுங்கள் வாரிசுரிமைச் சட்டங்களைக் கற்றுக் கொள்ளுங்கள். அதை மக்களுக்கும் கற்றுக்கொடுங்கள். ஏனெனில் என்னுயிர் கைப் பற்றப்படும். மார்க்க அறிவு மிகக் குறைந்துவிடும். மார்க்கக் கல்வியும் விரைவில் உயர்த்தப்பட்டுவிடும். ஒரு பர்ளான சட்டம் பற்றி இருவர் தர்க்கித்துக் கொள்வர். அந்த சட்டத்தின் சரியான விளக் கத்தைத் தருவதற்கு யாரும் இருக்க மாடார் என்று ஹஜ்ரத் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (பைஹக்கீ) இன்னும் (மக் களே இல்ம் திரும்ப எடுத்துக்கொள்ளப்படுவதற்கு முன் கல்வியைக் கைப்பற்றப்படுவதற்கு முன் கல்வியைக் கற்றுக் கொள்ளுங்கள்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அபூ உலமா பாஹிலீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

(முஸ்னர் அஹ்ப்)

இன்று லெளகீகக் கல்விக்காக வேண்டி பற்பல முயற்சிகள், செயற்றிட்டங்கள், முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை இம்மையிலும் மறுமையிலும் பயன்தரக்கூடிய ஆத்மீகக் கல்விக்காக வேண்டி எடுக்கப்படக்கூடிய முயற்சிகள் மிக மிகக் குறைவாகவே இருப்பது கவலைக்குரிய விடயமாகும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]