ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமைை
TUESDAY, FEBRUARY, 26, 2013

Print

 
அமைச்சர் மைத்திரியின் மகன் உட்பட 13 பேர் பிணையில் விடுதலை

பிரதி பொலிஸ் மா அதிபரின் மகன் மீதான தாக்குதல்

அமைச்சர் மைத்திரியின் மகன் உட்பட 13 பேர் பிணையில் விடுதலை

பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரின் மகனைத் தாக்கினாரென்ற சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டிருந்த சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் உள்ளிட்ட 13 பேரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருப்ப தாக பொலிஸ் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது.

இதேவேளை, காயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரதி பொலிஸ் மா அதிபரின் மகன் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியிருப்பதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாசிக்குடாவில் ஞாயிற்றுக்கிழமை மாலை மேற்படி இரு இளைஞர்கள் தலைமையிலான இரு வேறு குழுக்கள் மோதிக் கொண்டன. பாசிக்குடாவில் விடுமுறையைக் கழித்துக் கொண்டிருந்த வேளையில் ஒரு குழுவினர் வீடியோ படம் எடுத்ததனால் ஏற்பட்ட வாய்த்தர்க்கமே கைகலப்பில் முடிந்ததாக தெரிய வருகிறதென பொலிஸார் தெரிவித்தனர். சம்பவத்தில் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் மகனான அசேல வைத்தியலங்காரவே காயமடைந்தார். இவர் வைத்தியசாலையில் அனுமதிக் கப்பட்டதுடன், அமைச்சரின் மகனும் அவரது நண்பர்களுமான 13 பேர் நேற்றைய தினமே கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]