ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

சிறந்த திரைப்படமாக ஆர்கோவுக்கு ஒஸ்கார் விருது

சிறந்த திரைப்படமாக ஆர்கோவுக்கு ஒஸ்கார் விருது

ஈரான் இஸ்லாமிய புரட்சி தொடர்பாக எடுக்கப்பட்ட ஹொலிவூட் திரைப்படமான ‘ஆர்கோ’ சிறந்த திரைப்படத்திற்கான ஒஸ்கார் விருதை வென்றுள்ளது. 85 ஆவது ஒஸ்கார் விருது வழங்கும் வைபவம் லொஸ் ஏஞ்சல்ஸில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இதில் சிறந்த நடிகருக்கான விருதை ‘லின்கன்’ படத்தில் அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஆப்ரஹாம் லின்கனின் பாத்திரத்தை ஏற்று நடித்த டானியல் டே லுவிஸ் வென்றார். இதன் மூலம் அவர் மூன்று தடவைகள் சிறந்த நடிகருக்கான ஒஸ்கார் விருதை வென்ற முதல் நடிகராக சாதனை படைத்தார். இதற்கு முன்னர் 55 வயதான டே லுவிஸ் 1990 இல் ‘மை லைப் பூட்’ மற்றும் 2008 ‘தெயார் வில் பி பிளட்’ படத்தில் நடித்ததற்காக ஒஸ்கார் விருதை வென்றிருந்தார்.

கடந்த 1979 இஸ்லாமிய புரட்சியன்போது ஈரானில் சிக்கிக்கொண்ட அமெரிக்க இராஜதந்திரிகளை அங்கிருந்து மீட்டுவரும் சி.ஐ.ஏ. திட்டத்தை கதையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமான ‘ஆர்கோ’ சிறந்த திரைப்படமாக விருதுபெற்றது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி