ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமைை
TUESDAY, FEBRUARY, 26, 2013

Print

 
யாழ்ப்பாணத்தில் கரம் சுற்றுப் போட்டி

யாழ்ப்பாணத்தில் கரம் சுற்றுப் போட்டி

யாழ் மாவட்ட கரம் விளையாட்டுக் கழகத்தினால் யாழ் மாவட்ட கரம் விளையாடும் அணிகளுக்கு இடையே நடத்தப்பட்ட மணிஜெயா வெற்றிக் கிண்ணத்திற்கான கரம் சுற்றுப் போட்டியில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி மாவட்ட சம்பியனாக தெரிவு செய்யப் பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி உள்ளக விளையாட்டரங்கில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்பற்றிக்ஸ் கல்லூரியும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணியும் மோதிக் கொண்டன.

இரு அணிகளும் பலம் வாய்ந்த அணிகளாக காணப்பட்டதுடன் இறுதி வரை எந்த அணி வெற்றியைப் பெறும் எனக் கூற முடியாதவாறு இரு அணிகளும் மாறி மாறி வெற்றியைப் பெற்றுக் கொண்டன. மூன்று ஒற்றையர் கற்றையும் இரண்டு இரட்டையர் கற்றையும் கொண்ட ஐந்து சுற்றுப் போட்டிகளில் மூன்றுக்கு 02 சுற்றுக்கள் என்ற நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக அணி வெற்றிபெற்றுள்ளது.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]