ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமைை
TUESDAY, FEBRUARY, 26, 2013

Print

 
யாழ். மருதனார் மடத்தில் வட இலங்கை சங்கீத சபை புதிய கட்டடம் அங்குரார்ப்பணம்

யாழ். மருதனார் மடத்தில் வட இலங்கை சங்கீத சபை புதிய கட்டடம் அங்குரார்ப்பணம்

வட இலங்கை சங்கீத சபைக்கு பத்து மில்லியன் ரூபா செலவில் நிர்மாணிக் கப்பட்ட புதிய கட்டடம் யாழ் மருதனா மடத்தில் பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வட மாகாண ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோர்களினால் கடந்த சனிக்கிழமை திறந்து வைக்கப்படடது.

வட இலங்கை சங்கீத சபையின் தலைவரும் யாழ் வலயக் கல்விப் பணிப் பாளருமான உதயகுமார் தலைமையில் இக்கட்டட திறப்பு விழா நடைபெற்றது. இக்கட்டடத்தில் வாய்ப்பாடு, நடனம், புல்லாங்குழல், வயலின், வீணை, மிரு தங்கம், பண்ணிசை உள்ளிட்ட பல்வேறு கலை வகுப்புகள் நடைபெறவுள்ளன.

மேலும் இக்கட்டடத்தை செம்மைப் படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆளுநர் ஜி.ஏ. சந்திரசிறி ஆகியோர்களினால் ஒரு மில்லியன் ரூபா முதற்கட்டமாக வழங்கப்பட்டது. வட இலங்கை சங்கீத சபை கடந்த 80 வருட காலத்திற்கும் மேலாக கலைச் சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் வட மாகாண ஆளுநரின் செயலாளர் இ. இளங்கோவன், வட மாகாண கல்விப் பணிப்பாளர் வை. செல்வராஜா உள்ளிட்ட துறைசார்ந்தோறும் கலந்து கொண்டனர்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]