ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மாளிகை கிராமத்தில் அடிப்படை வசதிகளை சீர்செய்ய நடவடிக்கை

மீள்குடியேற்றம் செய்யப்பட்ட மாளிகை கிராமத்தில் அடிப்படை வசதிகளை சீர்செய்ய நடவடிக்கை

வவுனியா பிரதேச செயலாளர் அ. சிவபாலசுந்தரன்

மாளிகை கிராமசேவகர் பிரிவில் 134 குடும்பங்களை சேர்ந்த 438 பேர் உள்ளனர். இங்கு மீளக்குடியமர்வு 2010 ஆம் ஆண்டில் இருந்து படிப்படியாக செய் யப்பட்டிருந்தாலும் ஏனைய கிராமத்தவர்களை போல் அவர்களுக்கும் அடிப்படைத் தேவை கள் வழங்கப்பட்டுள்ளது. மீளக்குடிய மர்வுக்கான உதவி என்ற வகையில் 5000 ரூபா 41 குடும்பங்களுக்கும் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானி கராலயத்தினால் வழங்கப்படும் மீள்குடியேற்ற கொடுப்பனவு 81 குடும்பங்களுக்கும் வழங்கப்பட்டுள்ளது. 88 குடும்பங்களுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தற்காலிக வீடுகளை அமைப்பதற்கான சீமெந்துகள் 124 குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.

சீமெந்து வழங்கப்பட்ட குடும்பங்களுக் கான தற்காலிக வீடுகள் ஜப்பானிய பீஸ் வின் நிறுவனத்தின் உதவியில் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. இவர்கள் நிரந்தர மாக மீள்குடியேறிய குடும்பங்களாகும். இந்த பகுதியில் யுத்தத்திற்கு முன்னரும் அரசாங்கத்தின் உதவியில் பல வீடமைப்பு திட்டங்களுக்குள் உள்வாங்கப்பட் டுள்ளமையினால் பழுதடைந்த வீடுகளை திருத்துவதற்கும் அழிவடைந்த வீடுகளை மீள அமைப்பதற்கும் இக் கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட கிராமங்கள் 2013 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் கட்ட வீட்டுத் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது. இதேவேளை 79 குடும்பங்களுக்கு மலசல கூடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

மலசலகூடங்கள், நிரந்தர வீடுகள் வழங்கும்போதே அமைக்கப்படுவது வழக்கம் எனினும் தற்காலிக வீடுகளை வழங்கியபோதே அங்கு மலசலகூடம் வழங்கப்பட்டுள்ளது இந்த கிராமங்களில் 38 வரையான கிணறுகள் ஜப்பானிய ஜென் என்னும் நிறுவனத்தின் ஊடாக திருத்தி அமைக்கப்பட்டுள்ளன.

இத்துடன் மாளிகைக்குளம் எனும் மாகாண அரசின் கீழ் அமைந்துள்ள குளம் கெயார் நிறுவனத்தின் ஊடாக திருத்தி அமைக்கப்படுகின்றன.

அடிப்படை வசதியான மின்சாரம் வழங்குவதற்காக யாழ். கண்டிவீதியில் இருந்து சேமமடு வரையான வீதியில் உள்ளக மின் கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.

இந்த பகுதிக்கு மின்சாரம் இன்மை மிகப் பெரிய குறையாகும். ஏனெனில் யானைத் தொல்லை. மற்றும் ஏனைய விவசாயத்திற்கு மின்சாரம் அவசியமாகும். இவ்வகையில் மின்சார பொறியியலாளருக்கு நாம் மிக விரைவாக மின்சாரத்தை வழங்குமாறு கோரியுள்ளோம். அவர்களும் இந்த வருடத்திற்குள் மின்சாரத்தை வழங்குவதற்கு மிக விரைவாக நடவ டிக்கையை மேற்கொண்டுள்ளார்கள். அந்த பகுதியில் உள்ள அனைத்து கிராமத்திற்குமான அடிப்படை வசதிகள் முழுமையாக பூர்த்தி செய்யப்பட்டுவிடும் என தெரிவித்தார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி