![]()
|
||
பாடலில் 56 தடவை 'மே' வந்தது ஏன்?
பாடலுக்கான மெட்டு, படப்பிடிப்பு குழுவினருக்கான பாஸ்போர்ட், விசா எல்லாம் தயாராக இருந்தன. சிவாஜி, மஞ்சுளா கால்iட்டுகளும் ப்ரீ. பாடல் மட்டும் தயாராகவில்லை. பலமுறை கேட்ட போதும் கண்ணதாசன் எழுதி கொடுக்கவில்லை ‘அப்புறம் தருகிறேன்’ என்பதே அவரது பதிலாக இருந்திருக்கிறது. நாட்கள் ஓடிக்கொண்டிருந்தாலும் கவிஞர் கண்ணதாசனுக்கு நல்ல பாடல் வரிகளாக எழுத இயலவில்லையாம். எம். எஸ். வி. திரும்பத் திரும்ப கவிஞரிடம் மே மாதம் ஷ¥ட்டிங் இருக்கிறது, பாடலை விரைவில் கொடுங்கள் என்றார்.
பொறுமை இழந்த கடுப்பான கண்ணதாசன் ‘என்னையா.... சும்மா மே... மே... ன்னு சொல்லிக்கிட்டு இருக்கீங்க’ என்ற படியே ஐந்து நிமிடத்தில் பாட்டை எழுதி கொடுத்தாராம். அந்தப் பாடல்தான் ‘அன்பு நடமாடும் கலைக்கூடமே’ என்று தொடங்கும் பாடல். இந்தப் பாடலின் ஒவ்வொரு வரியும் ‘மே’ என்று முடியும். இந்தப் பாடலில் ‘மே’ என்ற எழுத்து 56 தடவைகள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக கவிஞரே கூறியுள்ளார். |
||
இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். [email protected] |