ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49
 

அறிவு காப்பாற்றும்

அறிவு காப்பாற்றும்

காட்டில் சிங்கம் ஒன்று இருந்தது. முதுமை அடைந்ததால் மிகவும் தளர்ச்சி அடைந்தது. அதனால் ஓடியாடி வேட்டையாட முடியவில்லை.

'வயிறாரா இரை கிடைக்க வேண்டும். என்ன செய்யலாம்' என்று சிந்தித்தது அது. நல்ல வழி ஒன்று அதற்குத் தோன்றியது.

தன் குகைக்குள் சென்ற அது கடும் நோய்வாய்ப்பட்டதுபோலப் படுத்துக் கொண்டது.

'அரசர் நோய்வாய்ப்பட்டுப் படுத்த படுக்கையாகக் கிடக்கிறார்' என்ற செய்தி காடெங்கும் பரவியது.

அரசரைக் காண்பதற்காகப் பல விலங்குகள் குகைக்குள் சென்றன. அவற்றைக் கொன்று தின்று மகிழ்ச்சியாக இருந்தது சிங்கம்.

காட்டிலிருந்த நரி ஒன்று சிங்கத்தைக் காண விரும்பியது. குகை அருகே வந்தது அது.

குகையின் வாயிலைக் கூர்ந்து கவனித்தது. குகைக்குள் விலங்குகள் சென்ற காலடித் தடங்கள் தெரிந்தன. எந்த விலங்கும் வெளியே வந்ததற்கான காலடித் தடங்கள் இல்லை. சிங்கம் ஏதோ சூழ்ச்சி செய்கிறது என்பதைப் புரிந்து கொண்டது. குகைக்கு வெளியே நின்றபடியே அது "அரசே! எப்படி இருக் கிaர்கள்?" என்று உரத்த குரலில் கேட்டது.

"நான் படுத்த படுக்கையாகக் கிடக்கிறேன். என்னால் நகரக் கூட முடியவில்லை. ஏன் நீ உள்ளே வந்து என்னைப் பார்க்கக் கூடாதா?" என்று கேட்டது சிங்கம்.

"அரசே! குகைக்குள் வர எனக்கு அச்சமாக உள்ளது. எங்கே என்னைக் கொன்று தின்று விடுவீர்களோ என்று நடுங்குகிறேன்" என்றது நரி.

"நீ வீணாக அஞ்சுகிறாய். நோயுற்றுக் கிடக்கும் என்னால் உன்னை என்ன செய்ய முடியும்? தயங்காமல் உள்ளே வா? என்று இனிமையாகப் பேசியது சிங்கம்.

"அரசே! விலங்குகள் குகைக்குள் சென்றதற் கான ஏராளமான காலடித் தடங்கள் குகைக்கு வெளிளே உள்ளன. ஒரு விலங்குகூடத் திரு ம்பி வந்த காலடித் தடம் இல்லை என்று அறிவுக் கூர்மை என்னைக் காப்பாற்றியது. நான் உள்ளே வரமாட்டேன்" என்று சொன்னது நரி.

தன் சூழ்ச்சி வெளிப்பட்டு விட்டதை அறிந்த சிங்கம் கோபத்தால் பற்களை நறநறவென்று கடித்தது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி