ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமை
TUESDAY ,FEBRUARY,26, 2013
வரு. 81 இல. 49

ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்திய தலைவர் இவர்

ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப்படுத்திய தலைவர் இவர்

ஐக்கிய தேசியக் கட்சி இலங்கையின் மிகப் பழமைமிக்க கட் சியாக இருக்கின்றது. நாடு சுதந்திரம் பெற்றது முதல் 1970ம் ஆண்டு தசாப்தம் ஆரம்பிக்கும் வரை இலங்கையில் இரு கட்சி பாராளுமன்ற ஜனநாயகம் தழைத்தோங்கி இருந்தது. சுதந்தி ரம் பெற்றவுடன் நாட்டின் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட தேசபிதா என்று அன்று மக்கள் பாராட்டைப் பெற்ற திரு. டி. எஸ். சேனநாயக்க பிரதமர் பதவியை வகித்து ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை அமைத்தார்.

அக்கட்சியில் பிரதம மந்திரி டி. எஸ். சேனநாயக்கவுக்கு அடுத்தபடி சிரேஷ்ட தலைவர்களாக சேர் ஜோன் கொத்தலாவலையும், திரு. எஸ். டபிள்யு. ஆர். டி. பண்டாரநாயக்கவும் இருந்தார்கள். நான்கா வது இடத்திலேயே அன்றைய பிரதம மந்திரியின் மகன் டட்லி சேனநாயக்க இருந்தார். அவருக்கு அடுத்தபடியாக ஆர். ஜி. சேனநாயக்க, ஜே. ஆர். ஜயவர்தன ஆகியோர் இருந்தனர்.

அப்போது ட்ரொக்ஸி வாதத்தை ஆதரிக்கும் லங்கா சமசமாஜக் கட்சி யும் கமியுனிஸ்ட் கட்சியும் பேரளவில் எதிர்கட்சிகளாக இருந்தன. எதிர்க்கட்சியினர் அன்று சமதர்மவாதத்தை கடைப்பிடித்து ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் முதலாளித்துவக் கொள்கையை ஆதரி க்கும் ஒரு பிற்போக்கு அரசாங்கம் என்று தொழிலாளர் வர்க்கத்தி னருக்கு பிரசாரம் செய்து இலங்கையின் முதலாவது பொது வேலை நிறுத்தத்தை 1953ம் ஆண்டில் நடத்தி நாட்டில் ஒரு பெரும் தொழி ற்சங்கப் புரட்சியை ஏற்படுத்தினார்கள். லங்கா சமசமாஜக் கட்சி யின் தலைவர் டொக்டர் என். எம். பெரேரா இந்த வேலை நிறுத் தத்திற்கு வெற்றிகரமான தலைமைத்துவத்தைக் கொடுத்தார். இந்த வேலைநிறுத்தம் பெரும்பாலும் அரிசியை மையமாக வைத்தே நட த்தப்பட்டது. 2வது உலக மகா யுத்தம் முடிவடைந்த காலம் தொட ங்கி இலங்கையில் அரிசி உணவிற்கு ஓரளவு தட்டுப்பாடு இருந்து வந்தது. இதனால் அன்று பதவியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஒவ்வொரு பிரஜைக்கும் ரேஷன் அட்டைகளை கொடுத்து அதனடிப்படையிலேயே அரிசி வாராவாரம் மக்களு க்கு 1 கொத்து அரிசி 25 சதம் என்ற சொற்ப தொகைக்கு விற்கப் பட்டது.

பிரதம மந்திரி டி. எஸ். சேனநாயக்க தனக்கு ஐக்கிய தேசியக் கட்சி யின் தலைவராக வருவதற்கு இடமளிக்கமாட்டார் என்று உணர் ந்த எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க 1951ம் ஆண்டில் தமது அமைச்சர் பதவியை இராஜினாமா செய்து எதிர்கட்சியில் சேர்ந்து கொண்டு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை உருவாக்கினார். அப்போது திரு. பண்டாரநாயக்காவுக்கு ஒரு நிழலைப் போல் இருந்து உதவி செய்தவர் தற்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தந் தையாரான அமரர் டி.ஏ. ராஜபக்ஷவாகும். 1952ம் ஆண்டில் பிர தம மந்திரி டி.எஸ். சேனநாயக்க காலிமுகத்திடலில் குதிரையில் சவாரி செய்து உடற்பயிற்சி எடுத்துக்கொண்ட போது, குதிரையில் இருந்து கீழே விழுந்து மரணமானார். பிரதம மந்திரியின் மரண த்தை அடுத்து அவரது உறவு முறையில் மருமகனான சேர். ஜோன் கொத்தலாவலை பிரதம மந்திரியாக நியமிக்கப்படுவார் என்று எதிர் பார்க்கப்பட்ட போதிலும், அன்று இலங்கையின் தேசாதிபதியாக இருந்த சோல்பரி பிரபு பிரதமமந்திரிப் பதவியை கட்சியில் கனி ஷ்ட அங்கத்தவரான டட்லி சேனநாயக்கவுக்கு வழங்கினார்.

அதையடுத்து 1953ல் லங்கா சமசமாஜக்கட்சித் தலைமையிலான முத லாவது பொது வேலைநிறுத்தம் வன்முறைகளுடன் இடம்பெற்றது. பொலிஸார் சுட்டபோது ஓரிருவர் மரணிப்பதைப் பார்த்து மனம் நொந்துப்போன அன்றைய பிரதம மந்திரி டட்லி சேனநாயக்க பாது காப்புக்காக விஜய என்ற கடற்படைக் கப்பலில் கடலில் பாதுகாப் பாக இருந்தவேளையில் எனக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது என்று கூறி பிரதமர் பதவியை இராஜினாமா செய்தார்.

அதையடுத்து சேர். ஜோன் கொத்தலாவலை பிரதம மந்திரியானார். கண்டிப்பான அந்த மனிதர் பெளத்த மகா சங்கத்தினரை கெளரவ மாக நடத்தவில்லை என்று பலரும் குற்றங்களை சுமத்தினார்கள். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி திரு. எஸ். டபிள்யூ. ஆர். டி பண்டாரநாயக்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான மக்கள் ஐக்கிய முன்னணியை பஞ்சமகா சக்திகளை ஒன்றிணை த்து 1956ம் ஆண்டு தேர்தலில் வெற்றிபெற்றால் 24 மணித்தியா லங்களில் சிங்கள மொழியை அரச கருமமொழி அந்தஸ்துக்கு உயர்த்துவோம் என்று அறிவித்தார்.

மக்கள் ஐக்கிய முன்னணி 1956ம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தின் பிரதமமந்திரியாக எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்க பதவியேற்றார். இவ்விதம் தான் இலங்கையின் 1977ம் ஆண்டுவரை இரு கட்சிப் பாராளு மன்ற ஜனநாயகம் சிறப்புற்று விளங்கியது.

அரசாங்கக் கட்சியில் இருந்தாலும் எதிர்கட்சியில் இருந்தாலும் மக்க ளின் பெருமதிப்பையும் அபிமானத்தையும் பெற்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சி அதன் தற்போதைய தலைவர் ரணில் விக்கிரமசிங் கவின் கோமாளித்தனமான அரசியல் கலாசாரத்தினால் கழுதை தேய்ந்து கட்டெறும்பாவது போல் இன்று சீர்குலைந்துபோய் எல் லோருடைய கிண்டலுக்கும் இலக்காகியிருப்பது உண்மையிலேயே வேதனையளிக்கிறது. தனது கட்சியை மீண்டும் கட்டியெழுப்பும் பணியை மேற்கொள்வதற்குப் பதில் ரணில் விக்கிரமசிங்க தான் தலையிடக்கூடாத பல விடயங்களில் தன் மூக்கை நுழைத்து தன்னை மட்டுமல்ல தனது கட்சியையும் கட்டியெழுப்ப முடியாத படுபாதாளத்திற்குள் தள்ளிவிடக்கூடிய முறையில் நடந்துகொள்கி றார்.

ரணில் விக்கிரமசிங்க முதலில் தனது கட்சியை ஒற்றுமைப்படுத்தி தனது கட்சிக்குள்ளேயே தலைவராக வேண்டும். அதற்குப் பின் னர் அவர் விரும்பினால் அரசாங்கத்தைப் பற்றி விமர்சிப்பதை எவரும் எதிர்க்க மாட்டார்கள்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி