ஹிஜ்ரி வருடம் 1434 ரபியுல் ஆகிர் மாதம் பிறை 14
நந்தன வருடம் மாசி மாதம் 14ம் திகதி செவ்வாய்க்கிழமைை
TUESDAY, FEBRUARY, 26, 2013

Print

 
செலான் வங்கியின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமான்ன

செலான் வங்கியின் புதிய தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயமான்ன

பிரதித் தலைவராக இஷார நாணயக்கார நியமனம்

ஜனாதிபதி சட்டத்தரணியும் செலான் வங்கியின் சிரேஷ்ட சுயாதீன பணிப்பாளருமான திரு. நிஹால் ஜயமான்ன வங்கியின் புதிய தலைவராக கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார். அதேநேரம், செலான் வங்கி பிரதித் தலைவராக திரு. இஷார நாணயக்கார பதவியேற்றுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணியான திரு. நிஹால் ஜயமான்ன, பிரசித்திபெற்ற சட்டத்தரணியும் சிரேஷ்ட ஜனாதிபதி சட்டத்தரணியுமாவார். சட்டத் துறையில் இவர் பல முக்கிய பொறுப்புக்களை வகித்துள்ளார்.

அவற்றுள் – இலங்கை சட்ட ஆணைக் குழுவின் தலைவர், கம்பனி சட்ட ஆலோசனை ஆணைக் குழுவின் தலைவர், இலங்கை சட்டக் கல்லூரி மன்ற தலைவர் மற்றும் சட்டத்துறை உட்கட்டமைப்பு பராமரிப்பு நிதிய நம்பிக்கைப் பொறுப்புச் சபையின் உறுப்பினர் போன்ற பதவிகளும் உள்ளடங்குகின்றன.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவரும், ஷிதிதிஞிவி ழிதிதீ அமைப்பின் முன்னாள் பிரதித் தலைவரும், இலங்கை தேசிய பொலிஸ் ஆணைக் குழுவின் ஒரு உறுப்பினராக பதவி வகித்தவருமான திரு. ஜயமான்ன, சட்டக் கல்வி ஆலோசனை சபையில் உறுப்பினராகவும், மனித உரிமைகள் மேம்பாட்டுக்கான ஆசியா பசுபிக் மன்ற ஜுரிகளின் ஆலோசனைக் குழு உறுப்பினராகவும் அத்துடன், இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தல் ஆணைக் குழுவின் ஆணையாளராகவும் செயற்படுகின்றார். இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை தலையீட்டினால் செலான் வங்கியின் வர்த்தக நடவடிக்கைகள் இடை நிறுத்தப்பட்டு, உடனடியாக புதிய பணிப்பாளர் சபையின் கீழ் செயற்பாடுகள் அனைத்தையும் மீள ஆரம்பிக்குமாறு உத்தரவிடப்பட்ட வேளையில் 2008 டிசம்பர் 30 ஆம் திகதி வங்கியின் பணிப்பாளர் சபைக்கு முதலாவதாக நியமிக்கப்பட்ட நான்கு பணிப்பாளர்களுள் திரு. ஜயமான்னவும் ஒருவராவார்.

அதேநேரம், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் லிமிட்டெட் மற்றும் ஸ்ரீலங்கன் கேற்றரிங்க் (பிரைவேட்) லிமிட்டெட் ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபைகளிலும் திரு. ஜயமான்ன பணியாற்றுகின்றார்.

மதிநுட்பமுள்ள ஒரு வர்த்தக முயற்சியாளரான திரு. இஷார நாணயக்கார பல்வேறு கூட்டாண்மை நிறுவனங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்களில் பணிப்பாளராக பதவி வகிக்கின்றார். இவர் ழிலிழிவி நிறுவனத்தில் மேற்கொண்ட முதலீட்டின் ஊடாக நிதியியல் சேவைகள் துறையில் துணிகர முயற்சி ஒன்றை நிலைநாட்டினார்.

ழிலிழிவி குழுமத்தின் பிரதித் தலைவர் என்ற வகையிலும் லங்கா ஒரிக்ஸ் ஃபினான்ஸ் பீ. எல். சி.யின் பணிப்பாளராகவும், கொமர்ஷல் லீங்க் அன்ட் ஃபினான்ஸ் நிறுவன தலைவராகவும் பதவி வகிப்பதன் மூலமும் அதேநேரம் இலங்கையின் தனியார் துறையிலுள்ள மிகப்பெரிய நுண்நிதியிடல் நிறுவனமான ழிலிழிவி மைக்ரோ கிரெடிட் லிமிடெட்டின் ஸ்தாபக பணிப்பாளர்களுள் ஒருவராக திகழ்வதன் ஊடாகவும் இவர் செயற்றிறன்மிக்க ஈடுபாட்டினை வெளிப்படுத்துவதன் காரணமாக, நிதியியல் சேவைகள் துறையில் பரந்துபட்ட விதத்திலான கவனத்தை செலுத்தி வருகின்றார். கம்போடியா நாட்டின் மிகப் பெரிய நுண்நிதியிடல் கம்பனியும், பிராந்தியத்தின் நுண் நிதியிடல்சார் சமூகத்தில் சிறப்பான பங்கினை வகிக்கின்றது நிறுவனமுமான ஜிஞிதிஷிதிவி இன் பணிப்பாளராக திரு. நாணயக்கார சேவையாற்றுகின்றார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2013 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]