ஹிஜ்ரி வருடம் 1433 றமழான் மாதம் பிறை 26
நந்தன வருடம் ஆடி மாதம் 31ம் திகதி புதன்கிழமை
WEDNESDAY ,AUGUST, 15, 2012
வரு. 80 இல. 193
 

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு சவ+தியில் ஆரம்பம்

இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு சவ+தியில் ஆரம்பம்

சிரியாவை விலக்க தீர்மானம்: மியன்மார் முஸ்லிம்கள் குறித்தும் கவனம்

இஸ்லாமிய நாடுகளின் கூட்ட மைப்பிலிருந்து சிரியாவை விலக்குவதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. 57 நாடுகளைக் கொண்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் இரண்டு நாள் மாநாடு நேற்று சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் ஆரம்பமானது. இதில் ஈரான் ஜனாதிபதி மஹ்மூத் அஹமதி நஜாத் உட்பட இஸ்லாமிய நாட்டு தலைவர்கள் பங்கேற்றனர்.

இந்த மாநாட்டுக்கு முன்னதாக இடம்பெற்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் சிரியாவை விலக்குவதற்கு திர்மா னிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் கடந்த 17 மாதங்களாக தொடரும் வன்முறைகள் மற்றும் ஜனாதிபதி பஷர் அல் அஸாத் அரசின் செயற்பாடுகளைக் கண்டித்தே இந்தத் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது.

எனினும் இந்தத் தீர்மானத்திற்கு ஈரான் எதிர்ப்பு வெளியிட்டுள்ளது. இதுகுறித்து ஜித்தா சென்றுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் அலி அக்பர் சலாஹி ஊடகங்களுக்கு கூறியதாவது:- “அங்கத்துவத்தை விலக்குவதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என எதிர்பார்க்க முடியாது. இதன் மூலம் பிரச்சினையில் இருந்து விலகிக் கொள்ள பார்க்கிaர்கள். எமக்கு இந்த பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டி யுள்ளது” என்றார்.

எனினும் வெளியுறவு அமைச்சர்களால் எடுக்கப்பட்ட இந்தத் தீர்மானத்திற்கு இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் வாக்கெடுப்பு நடத்தப் படவுள்ளது. இதில் மூன்றில் இரண்டு நாடுகள் ஆதரவாக வாக்களித்தாலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும்.

இது குறித்து இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் எக்மிலிதின் இக்சானொக்லு குறிப்பிடுகையில்; “சிரியாவில் நாளுக்கு நாள் நிலைமை மோசமடைந்து வருகிறது.

ஜனாதிபதி பஷர் அல் அஸாத் தனது பிடிவாதப் போக்கை கைவிட மறுத்தால், இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சிரியாவை இடைநீக்கம் செய்ய, இந்தக் கூட்டமைப்பு நாடுகளின் அமைச்சர்கள் கூட்டத்தில் தீர்மானம் இயற்ற ப்பட்டுள்ளது. இந்தத் தீர்மானம், இஸ்லாமிய கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் சமர்ப்பிக்கப்படவுள் ளது” என்றார்.

இன்று ஆரம்பமான மாநாட்டில் சிரியா மற்றும் மியன்மாரில் ஏற்பட்டுள்ள மனிதாபிமான நிலைமை குறித்து விசேட கவனம் செலுத்தப்படுவதாக இக்சானொக்லு குறிப்பிட்டார்.

மியன்மாரில் தொடரும் இன வன்முறையில் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட ரொஹிங்கியா முஸ்லிம்கள் பாதிக்கப் பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சவூதி அரேபியாவை தலைமையகமாக கொண்டு இயங்கும் இந்த கூட்ட மைப்பின் அவசர கூட்டமாகவே இந்த மாநாடு இடம்பெறுகிறது. இந்த மாநாட்டுக்கு சவூதி மன்னர் அப்துல்லா இம்மாத ஆரம்பத்தில் அழைப்பு விடுத்திருந்தார்.

கடந்த 1969 ஆம் ஆண்டு அமைக் கப்பட்ட இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு இதற்கு முன்னர் 1997 (பாகிஸ்தான்), 2003 (கட்டார்), 2005 (சவூதி) ஆகிய ஆண்டுகளிலும் அவசர கூட்டங்களை நடத்தியுள்ளது.

இந்நிலையில் முஸ்லிம் நாடுகளில் அரசியல் பதற்றம், வன்முறைகளுக்கு மத்தியிலேயே இந்த மாநாடு ஆரம்ப மாகியுள்ளமை குறிப்பிடத் தக்கது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி