ஹிஜ்ரி வருடம் 1433 ஜமாதுல் ஊலா பிறை 28
நந்தன வருடம் சித்திரை மாதம் 09ம் திகதி சனிக்கிழமை
SATURDAY ,APRIL, 21, 2012
வரு. 80 இல. 94

சித்திரைப் புத்தாண்டு நாளை மங்களகரமாக மலர்கிறது

சித்திரைப் புத்தாண்டு நாளை மங்களகரமாக மலர்கிறது

மிழ், சிங்கள புத்தாண்டு மங்கள பேரிகை முழங்க பட் டாசு வேட்டுக்களுடன் மகிழ்ச்சிகரமான முறையில் நந் தன புத்தாண்டு நாளை மலர்கிறது. மக்கள் தங்கள் குடு ம்பத்தினருடன் மத வழிபாட்டுக்களை கோயில்களுக்குச் சென்று முடித்துக் கொண்ட பின்னர் சிற்றுண்டிகளை சுவை த்து, பெரியோர்களிடம் ஆசீர்வாதம் பெற்று, ஆனந்தமாக புத்தாண்டு கொண்டாட்டங்களை காலையில் ஆரம்பிப்பார்கள்.

புத்தாண்டு அயலவர்கள், உறவினர்கள், நண்பர்கள் ஆகியோ ருடன் இருந்த பழைய பகைமைகளையும், கசப்புணர்வுக ளையும் மறந்து மீண்டும் நல்லெண்ணத்தையும், நட்புறவை யும் ஏற்படுத்திக் கொள்வதற்கு ஒரு அரிய வாய்ப்பாக அமைந்திருக்கிறது. அதிகாலையிலேயே இவ்விதம் நாம் பல காலமாக எதிரிகள் என்று நினைத்தவர்களிடம் சென்று, கைகோர்த்து புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் போது, மற்றவர்களும் கடந்த கால கோபதாபங்களை மற ந்து நீங்கள் நீட்டும் நேசக்கரத்தை வலுவாக பற்றிக் கொள் வார்கள்.

இது இருவருக்கு மத்தியில் அல்ல. இரு சமூகங்களுக்கிடையி லும் நடைபெற வேண்டிய ஒரு நற்பண்பாகும். எனவே, புத்தாண்டு மலர்ந்துள்ளதை அடுத்து இந்நாட்டு மக்கள் பல் லாண்டு காலமாக இனங்களுக்கிடையில் இருந்து வந்த பகை மையுணர்வு, சந்தேகங்களை முற்றாக மறந்து நல்லுறவை ஏற்படுத்திக் கொள்வதற்கு தங்களால் முடிந்தளவிற்கு சகல முயற்சிகளையும் எடுப்பது அவசியம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இந்நாட்டில் நாட்டுப் பற்றுள்ளவர்கள் நாட்டுப் பற்றற்றவர்கள் என்று இரண்டு இனங்களே இருக்கின்றன என்ற கருத்தை வலியுறுத்தியி ருக்கிறார். இதிலிருந்து எங்கள் நாட்டு ஜனாதிபதிக்கு இன, மத பிரதேச பேதங்கள் எதுவுமற்ற ஒரு ஐக்கிய இலங் கையை கட்டியெழுப்புவதில் ஆர்வம் இருப்பதை நாம் புரி ந்து கொள்ள முயும்.

நாட்டின் வடக்கு, தெற்கு, மேற்கு, கிழக்கு, மலையகம் என்ற சகல பிரதேசங்களிலும் தமிழர், சிங்களவர், முஸ்லிம்கள், பற ங்கியர், மலாயர் என்ற சகல மக்களும் விரும்பியதொரு இடத்தில் எவ்வித தடையுமின்றி கைவசம் பணமிருப்பின் வீடு, வாசல்களை வாங்கி அங்கு நிரந்தரமாக குடியிருப்ப தற்கான உரிமையை பெற்றிருக்கிறார்கள் என்ற உண்மையை ஜனாதிபதி அவர்கள் பகிரங்கமாகவே அறிவித்திருப்பது இந் நாட்டு மக்கள் அனைவருக்கும் பெரும் மகிழ்ச்சியூட்டுவ தாக இருக்குமென்பது திண்ணம்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் சிறந்த ஆளுமையின் மூலம் எங்கள் நாட்டை வளமான நாடாக மறுமலர்ச்சியடை யச் செய்து தெற்காசியாவின் இன்னுமொரு சிங்கப்பூராக மாற்ற வேண்டும் என்ற இலட்சியக் கனவை நிறைவேற்றுவ தற்கு இந்நாட்டு மக்கள் அனைவரும் பங்காளிகளாக இணை ந்து அரசாங்கத்தின் சகல முயற்சிகளுக்கும் பூரண ஒத்து ழைப்பை நல்குவோம் என்று திடசங்கற்பம் செய்து கொள் வதற்கு மலர்ந்துள்ள இந்த புத்தாண்டு ஒரு அரிய வாய் ப்பை அளிக்கின்றது.

பொதுவாக தமிழ், சிங்கள புத்தாண்டு காலத்திலேயே மது அரு ந்திய பின்னர் நண்பர்கள், உறவினர்களுடன் கோஷ்டி சண் டையில் ஈடுபட்டு, சில சந்தர்ப்பங்களில் கொலைகள் கூட நடப்பதுண்டு. மது போதையில் வாகனங்களை அளவுக்கு அதிகமான வேகத்தில் ஓட்டுவதிலும் விபத்துக்களும் மர ணங்களும் சம்பவிப்பதுண்டு.

பட்டாசுகளை கவனக் குறைவாக வெடிக்கச் செய்வதன் மூல மாக விபத்துக்களும், அயலவர்களிடையே மோதல்களும் ஏற்படுவதுமுண்டு. பலர் தீக் காயங்களுக்கும் இழக்காவது ண்டு. இந்த புத்தாண்டில் வீதி விபத்து மரணங்கள், வன் முறையில் ஏற்படும் மரணங்கள் மற்றும் பட்டாசு, மத்தாப்பு கொளுத்துவதனால் ஏற்படும் தீக் காயங்களை நாம் அனை வரும் மிகவும் பாதுகாப்பான முறையில் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மலர்ந்துள்ள புத்தாண்டு அடுத்து வரும் பல்லாண்டுகளுக்கு சுபீ ட்சத்தை ஏற்படுத்தி எங்கள் நாட்டை தேனும் பாலும் ஊற் றெடுக்கும் புண்ணிய பூமியாக மாற்றி இலங்கை மாதாவை மனம் குளிரவைக்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடன் எல் லோருக்கும் எங்கள் இதயம் கனிந்த புத்தாண்டு வாழ்த்துக் களை தெரிவித்து கொள்கிறோம்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி