ஹிஜ்ரி வருடம் 1433 ஜமாதுல் ஊலா பிறை 28
நந்தன வருடம் சித்திரை மாதம் 09ம் திகதி சனிக்கிழமை
SATURDAY ,APRIL, 21, 2012
வரு. 80 இல. 94
 

படைகளை திரும்பப் பெறும் பாகிஸ்தானின் முடிவிற்கு இந்தியா வரவேற்பு

படைகளை திரும்பப் பெறும் பாகிஸ்தானின் முடிவிற்கு இந்தியா வரவேற்பு

இந்தியா, பாகிஸ்தான் எல்லைப் பகுதியான சியாச் சென்னிலிருந்து படைகளை திரும்பப் பெறுவது குறித்து பாகிஸ்தான் தெரிவித்த கருத்திற்கு இந்தியா வரவேற்பு அளித்துள்ளது.

இமாலய மலைப் பிரதேசங்களில் அமைந்துள்ள இந்தியா- பாகிஸ்தான் எல்லைப்பகுதிகள் இங்கு அமைந்துள்ளதால் இரு நாடுகளும் தங்களது படைகளை குவித்து வருகின்றன.

இந்நிலையில் இம்மாதம் 7ம் திகதி இப்பகுதிகளில் பனிச்சரிவு ஏற்பட்டு 137 பாகிஸ்தான் வீரர்கள் பலியானது உலகம் முழுவதும் கவலையான சம்பவமாக அமைந்தது.

தற்போது வரை இதற்கான மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. சியாச்சென் பகுதிகளை பாகிஸ்தான் ஜனாதிபதி சர்தாரி, அந்நாட்டு இராணுவத் தளபதி கியானி ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது பேசிய கியானி, இந்தியா, பாகிஸ்தான் தங்களது படைகளை சியாச் சென்னிலிருந்து திரும்பப்பெறுவது நல்லது. இது போன்ற இழப்பு இனி ஏற்படக் கூடாது.

இராணுவத்திற்கு நாம் செலவளிக்கக்கூடிய பணத்தை இருநாடுகளும் அவரவர் நாட்டு வளர்ச்சிப் பணிகளுக்கு செலவழிக்கலாம் என்று கருத்து தெரிவித்திருந்தார்.

இந்த கருத்தை பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகம் ஏற்றுக் கொண்டு, இந்தியா- பாகிஸ்தான் தங்களது படைகளை வாபஸ் பெறுவதற்கு இது சரியான தருணம் என அறிவித்துள்ளது.

இந்தியா வரவேற்பு: இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மத்திய இணையமைச்சர் பல்லம் றாசு, சியாச்சென்னில் இரு நாட்டு படைகள் குவிக்கப்பட்டிருப்பதால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் குறித்து பாகிஸ்தான் உணர்ந்துள்ளதை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி