ஹிஜ்ரி வருடம் 1433 ஜமாதுல் ஊலா பிறை 28
நந்தன வருடம் சித்திரை மாதம் 09ம் திகதி சனிக்கிழமை
SATURDAY ,APRIL, 21, 2012
வரு. 80 இல. 94

நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள்:

சகல கட்சிகளதும் கருத்துகளை பெற நடவடிக்கை

சவால்களுக்கு முகம் கொடுத்து பலமான நாடாக இலங்கையை கட்டியெழுப்புவோம்

கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தொடர்பில் சகல கட்சிகளினதும் கருத்துக்கள் பெறப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியி னர் தமக்குள் கூடி ஆராய்ந்து அதன் கருத் துக்கள் அடங்கிய அறிக் கையை விரைவில் கட்சியின் தலைவர் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்ஷவிடம் கையளிக்க வுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் இது தொடர்பில் மேலும் தெரிவித்த அமை ச்சர்:

விவரம் »

பாராளுமன்றத்தில் சகல உறுப்பினருக்கும், நாட்டில் நிதிச் செயற்பாட்டை வலுவான முறையில் வெளிப்படைத் தன்மையுடன் மேற்கொள்வதற்கு வாய்ப்பளிப்பதற்காக, அனைத்து அமைச்சுகளிலும் ஆலோசனை செயற்குழுக்களின் அதிகாரத்தை மேலும் பலப்படுத்துவேன்.

- ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ 23ம் திகதி தென் கொரியா விஜயம்

இருதரப்பு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படும்

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தென்கொரிய ஜனாதிபதி லீ மையுங் – பக் அவர்களின் அழைப்பை ஏற்று நாளை மறுதினம் 23 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரையிலான காலப் பகுதியில் தென்கொரியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற் கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அவர்க ளுடன் முதற் பெண்மணி சிரந்தி ராஜபக்ஷவும் செல்வார். தென்கொரியாவுக்கான விஜயத்தின் போது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தென்கொரிய ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார். அவருடைய விஜயத்தின் போது பல இருதரப்பு உடன்படிக்கைகள் கைச்சாத்திட்டப்படும். சியோல் நகரத்தில் உள்ள நான்கு பாரிய வியாபார சங்கங்களின் அனுசரணையில் நடைபெறும் . . . .

விவரம் »

இந்திய பாராளுமன்ற குழுவினர் மலையகம், கிழக்கு விஜயம்

 

சர்வதேசம் தமிழ் கூட்டமைப்பினருக்கு யதார்த்தத்தை உணர்த்த வேண்டும்

நாட்டை காட்டிக் கொடுக்கும் ரணில் மீது அவரது கட்சியினரே விமர்சனம்

இலங்கையின் உள்ளக பிரச்சினைகளை சர்வதேசத்திடம் ஒப்படைக்கும் திட்ட மிட்ட செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. சர்வதேச சமூகம் நாட்டிற்கு பாதிப்பை ஏற்படுத்தாது தமிழ் தேசிய கூட்டமைப்பினர்க்கு யதார்த்தத்தை உணர்த்த முன்வர வேண்டும் என அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செய்தியாளர் மாநாடொன்று கொழும்பு மஹாவலி கேந்திர நிலையத்தில் நடைபெற்றபோது அங்கு ஊடகவிய லாளர்களுக்கு விளக்கமளித்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள் . . . .

விவரம் »

அலரிமாளிகையில் நேற்று காலை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட விருந்துபசாரத்திற்கு வருகை தந்த இந்திய பாராளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ஸ்ரீமதி சுஷ்மா சுவராஜ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களினால் வரவேற்கப்படுகிறார். படத்தில் அமைச்சர் ஜீ. எல். பீரிஸ், இந்திய உயர்ஸ்தானிகர் அசோக் கே. காந்தா ஆகியோரும் காணப்படுகின்றனர். (படம்: சுதத் சில்வா)