ஹிஜ்ரி வருடம் 1433 ஜமாதுல் அவ்வல் பிறை 03
கர வருடம் பங்குனி மாதம் 13ம் திகதி திங்கட்கிழமை
MONDAY ,MARCH, 26, 2012
வரு. 80 இல. 73
 

தென்மாகாண கல்வி அபிவிருத்திக்கு ரூபா 600 மில்லியன் ஒதுக்கீடு

தென்மாகாண கல்வி அபிவிருத்திக்கு ரூபா 600 மில்லியன் ஒதுக்கீடு

2012 ஆம் ஆண்டு தென் மாகாணத்தில் கல்வி நடவடிக்கைகளின் அபிவிருத்திக்கு என 600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக தென் மாகாண கல்வி அமைச்சர் சந்திம ராசபுத்திர தெரிவித்தார்.

இதன் மூலம் பாடசாலைகளில் புதிய கட்டடங்களை அமைத்தல், பாடசாலை கட்டடங்களின் சீர்திருத்தங்கள், செயலமர்வுகளை நடாத்துதல் சிறந்த பெபேறுகளை காண்பிக்கும் மாணவர்களை, அதிபர்களை ஆசிரியர்களை, பணிப்பாளர்களை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு வேலைத் திட்டங்களுக்கு இந்த முதல் பயன்படுத்தப்படவுள்ளது.

இதன் மூலம் தென் மாகாணத்தில் உள்ள காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள பாடசாலைகள் அபிவிருத்தி அடையவுள்ளன. (ஐ-ஞ)

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி