ஹிஜ்ரி வருடம் 1433 ஸபர் பிறை 03
கர வருடம் மார்கழி மாதம் 14ம் திகதி வியாழக்கிழமை
THURSDAY, DECEMBER,29, 2011

Print

 
பகிடிவதையை ஒழித்துக்கட்டி பல்கலைக்கழகங்களை காப்பாற்ற வேண்டும்

பகிடிவதையை ஒழித்துக்கட்டி பல்கலைக்கழகங்களை காப்பாற்ற வேண்டும்

யங்கரவாதம், டெங்கு நோய் ஆகியவற்றை விட எங்கள் நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்த வேண்டிய இளம் சமுதாயத்தை சீர்குலை த்து படுகுழியில் தள்ளும் அளவுக்கு ஒரு பெரும் ஆபத்தாக இன்று பகிடிவதை உருவாகியுள்ளது.

பாடசாலைக் கல்வியை நல்ல முறையில் முடித்துக் கொண்டு ஒரு மாண வனை அல்லது மாணவியை பெற்றோரும், சமூகமும் அதிக எதிர்பார்ப்பு டன் அவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உயர் கல்வியை பெறுவதற்கு அனுப்பி வைக்கின்ற போதிலும், பல்கலைக்கழகத்திற்கு செல்பவர்களில் மிகக் குறைந்த அளவிலான மாணவர்களே தங்களது பெற்றோரினதும் சமூ கத்தினதும் எதிர்பார்ப்புக்களையும், அபிலாஷைகளையும் நிறைவேற்றக் கூடிய வகையில் அங்கிருந்து பட்டம் பெற்று வெளியேறுகிறார்கள்.

பல்கலைக்கழகங்களில் இன்று ஒழுக்கம் சீர்குலைந்து அவை நாசகார அரசிய லுக்கு தூபம் இடும் நிலையங்களாக மாறுவதற்கு அடித்தளமாக அமை வது பகிடிவதை என்ற சமூக விரோத செயற்பாடாகும்.

40ம் ஆண்டு தசாப்தத்தின் கடைசி காலகட்டத்திலும் 50 ஆம் ஆண்டு தசா ப்தத்தின் ஆரம்பத்திலும் எங்கள் நாட்டு பல்கலைக்கழகங்கள் இங்கிலா ந்து, இந்தியா போன்ற நாடுகளின் பல்கலைக்கழகங்களை விட சிறப்புற்று விளங்கியதனால் அந்நாடுகளின் பல்கலைக்கழகங்கள் எமது நாட்டில் அன்றிருந்த பேராதனை மற்றும் கொழும்பு பல்கலைக்கழகங்களை ஒரு முன்மாதிரியாக வைத்து செயற்பட்டன. அதனால் இலங்கையின் இவ்விரு பல்கலைக்கழகங்களிலிருந்து பட்டம் பெற்று வெளியேறியவர்களுக்கு வெளிநாடுகளில் இலகுவில் வேலைவாய்ப்பை பெறக் கூடியதாகவும் இரு ந்தது.

40, 50 ஆம் ஆண்டு தசாப்தங்களிலும் பகிடிவதை எமது பல்கலைக்கழகங்க ளில் கடைப்பிடிக்கப்பட்டன. அன்று புதிய மாணவர்களுக்கும் பழைய மாணவர்களுக்கும் இடையில் நட்புறவை வளர்ப்பதற்காகவே பகிடிவதை ஒருவரை துன்புறுத்தாத வகையில் மிகவும் மென்மையான முறையில் கையாளப்பட்டன. பல்கலைக்கழகங்களுக்கு புதிதாக வரும் மாணவ, மாண வியர்கள் சிரேஷ்ட மாணவர்களைப் பார்த்து, கூச்சப்பட்டு ஒதுங்கியிருப் பதை தவிர்ப்பதற்கு அன்று கையாளப்பட்ட பகிடிவதை பேருதவியாக அமைந்தது.

அப்போதும் பகிடிவதைகள் ஒரு தண்டனைக்குரிய குற்றமாக பல்கலைக்கழக நிர்வாகம் கருதிய போதிலும், பகிடிவதை செய்பவர்கள் அந்தளவுக்கு தண்டிக்கப்படுவதில்லை. வெறுமனே இனிமேல் இப்படி செய்யக்கூடாது என்ற கண்டிப்பான உத்தரவுடன் பகிடிவதையில் ஈடுபட்டவர்கள் மன் னித்துவிடப்படுவார்கள்.

பகிடிவதையின் போது பகிடிவதை செய்யும் மாணவர்கள், பகிடிவதைக்கு இல க்காகும் மாணவர்கள் ஆகிய இருசாராரும் அதில் ஏதோவொரு மகிழ்ச் சியை காண்பார்கள். சுமார் 2 வாரங்களுக்கு பகிடிவதைகள் மேற்கொள் ளப்படும். ஒரு சிரேஷ்ட மாணவரை பல்கலைக்கழகத்திற்கு புதிதாக வந்த மாணவர்கள் எதிர்கொண்டால் அவருக்கு சலூட் அடித்து அல்லது இரு கைகளை கூப்பி வணக்கம் தெரிவிக்க வேண்டும். இதுபோன்று மற்றவர் களை துன்புறுத்தாத வகையிலேயே பகிடிவதைகள் அன்று இடம்பெற்றன. அன்றைய காலகட்டத்தில் பகிடிவதையினால் ஒருவர் கூட காயமடை யவோ அல்லது வேதனைக்குட்படவோ இல்லை.

எங்கள் நாட்டின் பல்கலைக்கழகங்கள் பகிடிவதை என்ற போர்வையின் கீழ் இன்று சித்திரவதை கூடங்களாக மாறியிருக்கின்றன. 1956 ஆம் ஆண்டிற் குப் பின்னர் எங்கள் நாட்டின் பல்கலைக்கழகங்களில் பகிடிவதையினால் 25க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் மரணித்து இருக்கிறார்கள். அவர் களை விட நூற்றுக்கும் மேற்பட்டோர் பகிடிவதையினால் நிரந்தரமாக ஏதா வது ஒரு ஊனத்தை அடைந்துள்ளார்கள்.

பல்கலைக்கழகங்களில் சில அரசியல் சக்திகள் தங்கள் செல்வாக்கை அதிக ரித்துக் கொள்வதற்காக பகிடிவதையை ஒரு போர்வையாக வைத்துக் கொண்டு, புதிய மாணவர்களை தங்கள் பக்கம் ஆளணி சேர்க்கும் பணியை பகிடிவதையின் மூலம் நிறைவேற்றிக் கொள்கிறார்கள். இந்த அரசியல் குழுவை எதிர்க்கும் இன்னுமொரு மாணவர் குழுவுக்கும் இடை யில் அடிக்கடி பல்கலைக்கழகங்களில் மோதல்கள் ஏற்பட்டு, இரு தரப்பி லும் பலர் நாளாந்தம் காயமடைதல் போன்ற நிகழ்வுகள் எந்நேரத்திலும் நடந்து கொண்டிருக்கின்றன.

ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களிடையில் ஏற் பட்ட மோதல்கள் காரணமாக சுமார் 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு அப்பாவி மாணவர் மரணித்தார். நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்று நாட்டின் தலைமைத்துவத்தை ஏற்கவேண்டிய பல்கலைக்கழக மாணவர் கள் இவ்விதம் வன்முறைகளிலும், குற்றச் செயல்களிலும் ஈடுபடுவதனால் நாட்டின் எதிர்காலம் பெரும் அச்சுறுத்தலை எதிர்நோக்குவதை எந்த சக் தியாலும் தவிர்க்க முடியாத நிலை இன்று தோன்றியுள்ளது.

சமீபத்தில் ருஹ¤ணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையின் போர்வையின் கீழ் ஒரு அப்பாவி மாணவி படிகட்டிலிருந்து பலவந்தமாக தள்ளிவிடப்பட்டத னால் அந்த மாணவி இன்று எழுந்துவிட முடியாமல் படுத்த படுக்கையில் கொழும்பு தேசிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். அந்த மாணவி உயிர் தப்பினாலும், நிரந்தரமாக சக்கர நாற்காலியிலேயே தனது வாழ்க்கையை தொடர வேண்டியிருக்கும்.

இத்தகைய வேதனைக்குரிய சூழ்நிலையில் உயர் கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க, தான் பகிடிவதையை முழுமையாக எமது பல்கலைக்கழகங் களிலிருந்து நீக்கிவிடப் போவதாகவும், அதற்காக அவசியம் ஏற்பட்டால், பகிடிவதைகளில் ஈடுபடும் மாணவர்களை பல்கலைக்கழகங்களிலிருந்து நிர ந்தரமாக நீக்கிவிடவும் தாம் தயங்கப் போவதில்லை என்றும் எச்சரிக்கை செய்துள்ளார்.

நாட்டின் நல்ல பிரஜைகளை உருவாக்க வேண்டிய பல்கலைக்கழகங்கள் இன்று சிறைச்சாலைகளை போன்று திரும்பிய இடமெல்லாம் சட்டத்தை யும், ஒழுங்கையும் நிலைநாட்டுவதற்கு பொலிஸார் கடமையில் ஈடுபட்டிரு ப்பதை பார்க்கும் போது நாம் வேதனைப்படுகிறோம். எனவே, இனிமேலா வது பல்கலைக்கழக மாணவர்கள் பகிடிவதைகளில் ஈடுபடுவதை முற்றாக தவிர்த்துக் கொண்டு அநாவசியமான அரசியல் சர்ச்சைகளில் மூழ்குவதை யும் தவிர்த்து, பல்கலைக்கழகங்களை கல்விகற்கும் புனித நிலையங்களாக மாற்றுவதற்கு உதவி செய்ய வேண்டும். இதற்கு பல்கலைக்கழக ஆசிரி யர்களும், பெற்றோரும் சமூகத் தலைவர்களும் தங்கள் பூரண பங்களிப்பை அளிக்க வேண்டும்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]