ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 

8ம் திகதி – வீண்வெளியிலிருந்து பூமிக்கு கிரகம் நெருங்கும்

8ம் திகதி – வீண்வெளியிலிருந்து பூமிக்கு கிரகம் நெருங்கும்

விண்வெளியில் இருந்து கீழிறங்கும் கிரகம் ஒன்று, இந்த மாதம் 8ம் திகதி பூமியை நெருங்கும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவன மான ‘நாசா’ தெரிவித்துள்ளது.

2005 ஓய்யூ 55 என்ற அந்த கிரகம், பூமியில் இருந்து 2.01 இலட்சம் மைல் வரை நெருங்கி வரும். 8ம் திகதி இந்த அதிசயம் நடைபெற உள்ளது. இது சந்திரனில் இருந்து பூமிக்கு உள்ள தூரத்தில் 0.85 பங்கு ஆகும்.

விண் பாறாங்கல் வடி விலான இந்த கிரகம், பூமிக்கு அருகில் வருவ தால் விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்ய உதவும். அதன் மூலம் பூமியின் பூர்வீகம் மற்றும் கோள்கள் இடையே எதிர்கால நிகழ்வுகள் பற்றி விஞ்ஞானிகளுக்கு முக்கிய விஷயங்கள் தெரிய வரும். 1,300 அடி அகலம் கொண்டது இந்த ஓய்யூ 55 கிரகம். சீரற்ற சுழற்சி, மெதுவான சுற்றுப் பாதை கொண்ட இது, கருமையானது என நாசா தெரிவித்துள்ளது.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி