ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 07
கர வருடம் ஐப்பசி மாதம் 18ம் திகதி வெள்ளிக்கிழமை
FRIDAY, NOVEMBER,04, 2011


 

Print

 
அமெரிக்க இராணுவ அமைச்சர் லியோன் இந்தியா செல்கிறார்

அமெரிக்க இராணுவ அமைச்சர் லியோன் இந்தியா செல்கிறார்

அமெரிக்க இராணுவ அமைச் சர் லியோன் பெனிடா, விரை வில் இந்திய பயணம் மேற் கொள்ள உள்ளார்.

இந்தியாவுக்கும் அமெரிக்கா வுக்கும் உள்ள இராணுவ தொடர்பு குறித்த அறிக்கையை அந்நாட்டு பாராளுமன்றில் அமெரிக்க இராணுவ தலைமை யகமான பென்டகன் சமீபத்தில் தாக்கல் செய்தது. இது குறித்து இராணுவ துணை அமைச்சர் ராபர் ஸ்கெர், நிருபர்களிடம் குறிப் பிடுகையில், சர்வதேச அளவில் இந்தியா முக்கிய பங்காற்றி வருகிறது. பல நாடுகளில் அமைதி பணியில் இந்திய படைகள் ஈடுபட்டு வருகின்றன.

ஜி 20 மாநாட்டில், ஜனாதிபதி ஒபாமாவுடன் முக்கிய விஷயங் களை விவாதிக்கும் தலைவராக பிரதமர் மன்மோகன் உள்ளார்.

இந்தியாவுடனான இராணுவ உறவை மேம்படுத்துவதற்கு இராணுவ அமைச்சர் லியோன் பெனிடா, விரைவில் இந்திய பயணம் மேற்கொள்ள உள்ளார் என்றார்.


இப்பத்திரிகை அஸோஸியேட்டட் நியூஸ் பேப்பர்ஸ் ஒப் சிலோன் லிமிடட்
© 2011 சகல உரிமைகளும் நிறுவனத்துக்கே
உங்கள் கருத்துக்களையும், யோசனைகளையும் வரவேற்கிறோம். 

[email protected]