ஹிஜ்ரி வருடம் 1432 துல்ஹஜ் பிறை 08
கர வருடம் ஐப்பசி மாதம் 19ம் திகதி சனிக்கிழமை
SATUREDAY, NOVEMBER 05, 2011
வரு. 79 இல. 263
 
சார்க் உச்சிமாநாட்டின் பாதுகாப்பிற்கு இலங்கையிலிருந்து மோப்பநாய்கள்

சார்க் உச்சிமாநாட்டின் பாதுகாப்பிற்கு இலங்கையிலிருந்து மோப்பநாய்கள்

மாலைத்தீவில் நவம்பர் 10,11ம் திகதிகளில் நடைபெறவுள்ள சார்க் நாடுகளின் அரசாங்கத் தலைவர்கள் கலந்துகொள்ளும் உச்சிமாநாட்டுக் கான பாதுகாப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக இலங்கை பொலிஸ் மற்றும் ஆயுதப்படை களினால் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்கள் பாதுகாப்பு சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளன.

இந்த நாய்கள் அவற்றை பரா மரிக்கும் உத்தியோகத்தர்களுடன் ஏற்கனவே மாலைத்தீவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மாலைத்தீவின் அடு நகரில் உள்ள கேன் சர்வதேச விமான நிலையத்தில் இவை பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள் ளன. இந்த நாய்கள் பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருக்கும் வெடிகுண்டுகளை மோப்பம் பிடித்து கண்டு பிடிப்பதில் வல்லமை பெற்றவை என்பது குறிப் பிடத்தக்கது.

இவை விமான நிலையத்தில் மாத்திரமல்லாது உச்சிமாநாடு நடைபெறும் மாநாட்டு மண்டபம், அரச தலைவர்கள் தங்கியிருக்கும் விசேட இடங்கள் மற்றும் விசேட விழாக்களுக்கு பாதுகாப்பு வழங்கும் பணியிலும் ஈடுபடுத்தப்பட வுள்ளன. இலங்கையின் ஆயுதப்படையினர் உலகின் மிகப்பெரிய பயங்கரவாத இயக்கமான எல்.ரி.ரி.ஈயை தோல்வி அடையச் செய்யும் வல்லமை பெற்றிருந்தது போல் பாதுகாப்பு படையினரால் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்கள் பயங்கரவாதிகளின் வெடிகுண்டுகளை கண்டுபிடிப்பதில் திறமை மிக்கவையாக இருப்பதில் உண்மையிலேயே மகிழ்ச்சிக்குரிய விடயமாகும்.

ஆசிரியருக்கு எழுதுங்கள் | அச்சுப் பிரதி